பி.எம்.இந்தியா
எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியான வெற்றியைப் பெற்ற பிரதமர் திரு.அபிய் அகமது அலி மற்றும் அவரது கட்சிக்கு (ப்ராஸ்பெரிட்டி கட்சி) பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எத்தியோப்பியாவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆழமான வேரூன்றிய உறவுகளை இந்தியா மிகவும் மதிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு தான் எத்தியோப்பியா சென்றிருந்ததை நினைவு கூர்ந்த அவர், இந்தியா-எத்தியோப்பியா இடையிலான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தவும் பிரதமர் அபிய் அகமது அலியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் தீர்மானிக்கத்தக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர், பிரதமர் அபிய் அகமது அலி மற்றும் ப்ராஸ்பெரிட்டி கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எத்தியோப்பியாவுடனான நமது வரலாற்றுச் சிறப்புமிக்க, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆழமான வேரூன்றிய உறவுகளை இந்தியா பெரிதும் மதிக்கிறது. கடந்த ஆண்டு நான் எத்தியோப்பியா சென்றிருந்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறேன். நமது உத்திசார்ந்த கூட்டாண்மை யையும், நமது மக்களுக்கிடையிலான நட்புறவையும் மேலும் வலுப்படுத்த நாம் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277217®=3&lang=1
செய்தி அடையான எண்:2277217
****
TV/VK/SH
Heartiest congratulations to my friend, Prime Minister Abiy Ahmed Ali and the Prosperity Party for a decisive victory in the Ethiopian parliamentary elections.
— Narendra Modi (@narendramodi) June 23, 2026
India greatly cherishes its historic, multifaceted and deep-rooted ties with Ethiopia. I fondly recall my visit to…