பி.எம்.இந்தியா
‘எளிதான வாழ்க்கையை’ ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி, வலியுறுத்தியுள்ளதுடன், வரும் காலங்களில் சீர்திருத்தப் பாதை இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். தமது அரசு அந்தத் திசையில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை விளக்கும் ஒரு பதிவையும் திரு மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“எங்கள் அரசு ‘எளிதான வாழ்க்கையை’ மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. கீழே உள்ள இந்தப் பதிவு, நாங்கள் அந்தத் திசையில் எவ்வாறு செயல்பட்டுள்ளோம் என்பதற்கு உதாரணங்களைத் தருகிறது. எங்கள் சீர்திருத்தப் பாதை வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும்.”
***
(Release ID: 2208668)
AD/PKV/RJ
Ours is a Government committed to boosting ‘Ease of Living’ and this thread below gives examples of how we have worked in that direction. Our reform trajectory will continue with even more vigour in the coming times. https://t.co/4ZdPFQl92b
— Narendra Modi (@narendramodi) December 26, 2025