Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்தாலி மொழியில் இந்திய அரசியல் சாசனம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் பாராட்டு


சந்தாலி மொழியில் இந்திய அரசியல் சாசனம் மொழிப்பெயர்க்கப்பட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டுள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது அம்மொழி பேசும் மக்கள் அரசியல் சாசனத்தைப் புரிந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். சந்தாலி கலாச்சாரத்தால் நாடு பெருமையடைகிறது என்றும் நாட்டின் முன்னேற்றத்தில் சந்தாலி மக்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இது பாராட்டத்தக்க முயற்சி!

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் அம்மொழி பேசும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஆழமான ஜனநாயக பங்கேற்புக்கும் உதவும்.

சந்தாலி கலாச்சாரத்தாலும், நாட்டின் முன்னேற்றத்தில் சந்தாலி மொழி பேசும் மக்களின் பங்களிப்புக்காகவும் இந்தியா பெருமையடைகிறது.”

***

(Release ID: 2208648)

AD/PLM/KPG/RJ