Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிஸ்வ பந்து சென்னின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


திரிபுரா சட்டப்பேரவைத் தலைவர் பிஸ்வ பந்து சென்னின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரிபுராவின் முன்னேற்றத்திற்காகவும் எண்ணற்ற சமூகப் பணிகளுக்காகவும் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திரபுரா சட்டப்பேரவைத் தலைவர் பிஸ்வ பந்து சென்னின் மறைவால் வேதனையடைந்தேன். திரிபுராவின் முன்னேற்றத்திற்காக ஏராளமான சமூகப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். இந்தத் துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”

***

 

AD/PLM/KPG/SE