Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐரோப்பிய மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சி வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக அமைச்சரவை ஒப்புதல்


மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

இ.பி.ஆர்.டி.யின் உறுப்பினராக தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சகத்தின் கீழான பொருளாதார விவகாரங்கள் துறை எடுக்கும்.

தாக்கம்:

  • இ.பி.ஆர்.டி.யின் உறுப்பினராவதன் மூலம் இந்தியாவின் சர்வதேச நிலை விரிவடைந்து பொருளாதார விருப்பங்களை மேம்படுத்தும். இ.பி.ஆர்.டி.யின் செயல்பாடு கொண்ட நாடுகள் மற்றும் துறை அறிவாற்றலை அணுகலாம்
  • இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள் ஊக்கம் பெறும்
  • உற்பத்தி, சேவைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறைகளில் இணை நிதி வாய்ப்புகள் மூலம் இந்தியா மற்றும் இ.பி.ஆர்.டி. இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
  • இ.பி.ஆர்.டி. செயல்படும் நாடுகளில் தனியார் துறையின் வளர்ச்சி இ.பி.ஆர்.டி.யின் முக்கிய செயல்பாடு ஆகும். இதில் உறுப்பினர் ஆவதன் மூலம் இந்தியா வங்கியின் தொழில்நுட்ப உதவி மற்றும் துறைசார்ந்த அறிவாற்றலைப் பெற்று அதன் மூலம் தனியார் துறை வளர்ச்சியில் பயன் பெறலாம்
  • இது நாட்டின் முதலீட்டு சூழலை மேம்படுத்த உதவும்
  • இ.பி.ஆர்.டி.யின் உறுப்பினராவதால் இந்திய நிறுவனங்களின் போட்டித் திறன் விரிவடையும். வர்த்தக வாய்ப்புகள், கொள்முதல் செயல்பாடுகள், ஆலோசனைப் பணிகள் உள்ளிட்டவற்றில் சர்வதேச சந்தைகளில் விரிவுபடுத்தப்பட்ட அணுகுதலை அளிக்கும்
  • ஒருபுறம் இது இந்திய நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுவதுடன், மறுபுறம் இந்திய ஏற்றுமதிகளுக்கு வாய்ப்பு அளிக்கும்
  • அதிகரிக்கும் பொருளாதார செயல்பாடுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
  • இந்தியர்களுக்கு இந்த வங்கியில் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் இது சாத்தியமாக்கும்

நிதி தாக்கங்கள்:

இ.பி.ஆர்.டி.யில் உறுப்பினராவதற்கான குறைந்தபட்ச தொடக்க முதலீடு 1 மில்லியன் யூரோவாக இருக்கும்.  எனினும் உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச பங்குகளை (100) வாங்க வேண்டும் என்பதால் இது இந்தியாவின் முடிவைப் பொருத்தது. அதிக அளவு பங்குகளை வாங்கினால் நிதி தாக்கம் அதிகமாக இருக்கும். வங்கியில் இணைவதற்கான கொள்கை ஒப்புதல் அமைச்சரவையிடமிருந்து இந்த நிலையில் பெறப்பட்டுள்ளது.

பின்னணி: 

ஐரோப்பிய மறுகட்டுமான மற்றும் வளர்ச்சி வங்கியில் உறுப்பினராவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலவும் உற்சாகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாடு காரணமாக பல அடுக்கு வளர்ச்சி வங்கிகளான உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கிகளுக்கு அப்பாற்பட்டு உலகளாவிய வளர்ச்சி நிலப்பரப்பில் இந்தியா விரிவடைய வேண்டும் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் தான் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் இணையும் முடிவு எடுக்கப்பட்டது.

 

***