Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் வாழ்த்து


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஓணம், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு உயிரோட்டமான பண்டிகை என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இப்பண்டிகை, சமூகத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்த பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

 

“அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை.

 

இந்தப் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்.”

 

(Release ID : 2303397)

****

SS/PLM/SH