பி.எம்.இந்தியா

ஓமனில் இருந்து இந்தியக் கூட்டுத் தொழில் குழுவை சார்ந்த 30 இளைய தொழில் அதிபர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
இருநாடுகளுக்கு இடையேயான நீண்டகால வரலாற்றையும், கடல்சார் தொடர்புகள் குறித்தும் கருத்துக்களை இருதரப்பும் பகிர்ந்து கொண்டன.
இந்தக் கலந்துரையாடலின் போது, இருநாடுகளுக்கு இடையே எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். ஓமன் சுல்தானுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், ரமலான் புனித மாதத் துவக்கத்திற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
***
Members of Oman India Joint Business Council meet PM @narendramodi. https://t.co/vCyPYFgVHR pic.twitter.com/0SOkLPPZPb
— PMO India (@PMOIndia) May 16, 2018