பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம், கனடா நாட்டின் விண்வெளி அமைப்பு மற்றும் இந்தியாவின் விண்வெளித்துறை / இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இடையே 15 ஏப்ரல் 2015 அன்று, கனடாவில் ஒட்டாவா, விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது.
கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஒரு குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை கூட்டாக உருவாக்குதல் மற்றும், விண்வெளித் துறையில் அமைதிக்கான திட்டங்களை வகுத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும்.
பின்னணி
ஆஸ்ட்ரோசாட் விண்வெளி திட்டத்தின் அடிப்படையில் டிசம்பர் 2003 மற்றும் ஜுன் 2004ல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு செயலகம் மற்றும் புறஊதா ஒளிப்படம் எடுக்கும் தொலைநோக்கி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விண்வெளி ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுகிறது. அமைதிக்கான விண்வெளி ஆராய்ச்சியில் வருங்காலத்தில் ஒத்துழைப்பு மேற்கொள்ளவும், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், இரு நாடுகளிடையே, அரசு, மற்றும் தொழில் துறைகளில் உறவை மேம்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.