Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வில் இளம் விஞ்ஞானிகளுக்கான ஐந்து ஆய்வகங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை


நாட்டில் ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இளம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  கர்நாடகத்தில் 2020-ல் என்னுடைய முதல் பயணம், ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன் ஆகிய புதிய இந்தியாவுக்கான அர்ப்பணிப்பாக  அமைந்துள்ளது.  டிஆர்டிஓ-வுடன் தொடர்புடைய மதிப்பிற்குரிய டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் விமான மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த பெருமைக்குரியது.

 

நண்பர்களே,

 

இந்தப் பத்தாண்டு புதிய இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  ஏனென்றால் இது ஒரு புத்தாண்டு மட்டுமல்ல, 2020 என்கிற 10 ஆண்டின் தொடக்கம் ஆகும்.  உலகில் இந்தியாவின் நிலை என்ன என்பதை முடிவு செய்யும் பத்தாண்டுகள் ஆகும். டிஆர்டிஓ-வை மறு வடிவமைக்க வேண்டும் என நான் வலியுறுத்துவதன் பின்னணியில், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய சக்தியுடன் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டியுள்ளது. அதேநேரத்தில் 36 வயதானவர்கள் தேவையில்லாதவர்களாகி விடுவார்கள் என்று அர்த்தமல்ல. 60 வருடங்கள், 50 வருடங்கள், 55 வருடங்கள் கடின உழைப்பை வழங்கியவர்களுக்கு 35 வயதிற்கு குறைவானவர்களின் ஆதரவை கோருவதால், புதிய இந்தியாவை உலகம் காண முடியும்.  வயதான அனுபவமிக்கவர்களின் பலம் இல்லாமல், புதிய இளைஞர்கள் முன்னேறுவது சாத்தியமில்லை.  இந்த யோசனையின் பின்னால் எனக்கு தனிப்பட்ட அனுபவம் உள்ளது.  அரசியல் வாழ்க்கைக்கு நான் தாமதமாக வந்துள்ளேன்.  தொடக்கத்தில் கட்சியின் பொறுப்புகளையும், தேர்தல்களிலும் வழக்கமாக நான் கவனித்தேன்.  குஜராத்தில் நான் 23 வயதாக இருக்கும் போது, 90 பேருடன்  இணைந்து தேர்தலுக்காக பணியாற்றினேன்.  அப்போது முதல் முறையாக நாங்கள் வெற்றி பெற்றோம்.

 

இளம் வயதினர் மிக அதிக கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருப்பர்.  உதாரணமாக நீங்கள் ஒரு மிகச்சிறந்த கபடி வீரராக இருந்து உங்கள் வாழ்வில் 20 ஆண்டுகள் கபடி விளையாடி இருக்கலாம்.  தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் விளையாடி இருக்கலாம்.  அப்போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதல்ல விஷயம், ஆனால், 60-70 வயதை நீங்கள் எட்டியவுடன், கபடி போட்டியை பார்க்கச் சென்றால், இளம் கபடி வீரரை பார்க்கும் போது, அவர் காயம் அடையக்கூடும் என நீங்கள் அச்சப்படுவீர்கள். இளைஞர்களின் எண்ணத்துக்கும் அனுபவசாலிகளின் எண்ணத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.  அந்த வகையில் உலக சவால்களை ஏற்றுக்கொள்வதற்கு டிஆர்டிஓ-வில் இருதரப்பினரின் எண்ணங்களையும் எப்படி இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பார்க்க வேண்டும்.  நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய துறையில் ஐந்து ஆய்வகங்கள் அமைக்கும் யோசனை எனக்கு மகிழ்ச்சி தருகிறது.  அதன்படி தீவிரமாக மேற்கொண்ட முயற்சியின்படி, பெங்களுரு, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் ஐந்து ஆய்வகங்கள் அமையவுள்ளன.  இந்த ஆய்வகங்கள் இளம் விஞ்ஞானிகளின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் என நான் நம்புகிறேன்.  அதன்படி,  இது டி ஆர் டி ஓ-ஒய் என அங்கீகரிக்கப்படும். இதனைச் சொல்லும்போது, அதன் ஒலியானது, டி ஆர் டி ஓ-ஏன் என்பதாக இருக்கும்.  நாம் அனைவரும் இணைந்து அதனை வலுப்படுத்துவோம்.  நாட்டில் புதிய தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வடிவம் தருவதற்கு இந்த ஆய்வகங்கள் உதவும்.

 

இந்த ஆய்வகங்கள் தொழில்நுட்பங்களை மட்டும் சோதனை செய்யாது என்று இளம் நண்பர்களுக்கு தெரிவிக்க நான் விரும்புகிறேன்.  சில நேரங்களில் இந்த தொழில்நுட்பம் 2 அல்லது 5 முன்னேற்ற படிகளை கொண்டிருக்கும் என கருதுகிறேன்.  தொழில்நுட்பத்தை மட்டுமே கொண்டிராமல் இளம் விஞ்ஞானிகளின் பொறுமையையும் சோதிக்கக்கூடிய வகையிலான மிகப்பெரிய கருவியாக இருக்கும்.

 

உங்களின் முயற்சிகள் மற்றும் தொடர் பயிற்சிகளால் மட்டுமே இந்தியா வெற்றிப்பாதையை நோக்கி செல்லும் என்பதை நீங்கள் எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.   நேர்மறை எண்ணம்  அல்லது நோக்கம் மட்டுமே  உங்களின் உத்வேகமாக இருக்க வேண்டும்.  உங்களின் கடமையானது,  130 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எளிமையை உங்களின் தோள்களில் கொண்டுள்ளீர்கள் என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயல்படுங்கள்.

 

இந்த ஐந்து ஆய்வகங்களும் 35 வயது மற்றும் அதற்கு கீழ் வயதுடையவர்களை கொண்டிருக்கும்.   அவர்களுக்கு 36 வயதாகும் போது என்ன நிகழும்?  இந்த ஐந்து ஆய்வகங்களும் 45 அல்லது 55 என்ற வயதை அடையும் போதும் அந்த மக்கள் நீடிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்க விரும்புகிறேன்.

 

இன்று டிஆர்டிஓ-வில் நாட்டின் மிகச்சிறந்த விஞ்ஞானப்பூர்வ மக்கள் உள்ளனர்.  டிஆர்டிஓவின் சாதனைகள் முடிவில்லாதவை.  நான் பார்வையிட்ட  கண்காட்சி உங்களின் தற்போதைய சாதனைகளை மட்டுமல்லாமல் எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்து இருந்தது.  நான் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான எளிமையான மொழியில் இளைஞர்கள் விளக்கம் அளித்தனர்.  நானும் அதனைச் செய்ய முடியும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.  உலகில் மிகச்சிறந்த ஏவுகணைத் திட்டங்களை போன்று நீங்கள் இந்தியாவில் ஏவுகணைத் திட்டங்களை உருவாக்கியுள்ளீர்கள்.  விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவின் பலத்தை புதிய திசைக்கு கடந்த ஆண்டு கொண்டு சென்றுள்ளது.  ஏ-சாட் வடிவிலான விண்வெளித் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருப்பது இந்தியாவின் 21 ஆம் நூற்றாண்டுத் திறமையைக் கண்டிப்பாக விளக்குவதாக அமையும்.

 

ராம்சரிதமானஸின் வாசகங்களை  குறிப்பிட்டார்.  அதாவது, இந்த பூமியில் எது உங்களால் செய்ய முடியாதது?  அனைத்தையும் நீங்கள் செய்ய முடியும்,  எதுவும் உங்களுக்கு கடினமானதல்ல, உங்களின் திறமைகள் எல்லையற்றவை, மிக அதிக அளவு நீங்கள் செய்யமுடியும்.  வாய்ப்புகளை விரிவுபடுத்தி உங்களின் திறமைகளுக்கான எல்லைகளை மாற்றி, சிறகுகளை விரித்து முழுமையான திறனுடன் வானத்தை ஆளுவதற்கு உங்கள் ஊக்கத்தை வெளிப்படுத்துங்கள்.  உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.  நான் உங்களுடன் இருக்கிறேன்.

 

நாட்டின் பிரதமர் என்ற முறையில்,  உங்கள் முன் நான் நிற்கிறேன்.   விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்களாகிய உங்களுடன் தோளோடு தோள் நிற்பதற்கு இந்தியா தயாராக  உள்ளதாக தெரிவிக்கிறேன்.  எதிர்கால தொழில்நுட்பத்தின் முதலீடு என்பது அவசியம், நாட்டின் குடிமக்கள், அதன் எல்லைகள், நலன்களை  பாதுகாப்பதற்கு புதிய கண்டுபிடிப்புகளும் தேவை.

 

இந்தியாவுடன் நட்புறவு கொண்ட அண்டை  நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த டிஆர்டிஓ பங்களிக்க முடியும்.  சிறிய நாடுகளின் மக்களை நான் சந்தித்த போது அவர்களின் தேவை அதிகம் உள்ளதை அறிந்தேன்.  அந்த மக்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியும்.  இது மனிதாபிமானப் பணியாக இருக்கும்.  உலக அரங்கில் இந்தியாவின் பங்கினை வலுப்படுத்துவதுடன், அப்படி செய்வதால் மனிதாபிமானத்திற்கான மிகப்பெரிய சேவையாகவும் இருக்கும்.

 

நண்பர்களே,

 

பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா தன்னிறைவை எட்டுவதற்கு டிஆர்டிஓ  புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்.  நாட்டில் பாதுகாப்புத் துறையில் பரந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தவும்,  இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்தவும் டிஆர்டிஓ-வின் புதிய கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய பங்கினை அளிக்கும்.

 

நண்பர்களே,

 

பாதுகாப்புத் துறையில் புதிய சீர்திருத்தங்களை நோக்கி, தற்போது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.  உலகில் வேகமான மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் ஆக்கிரமித்து வருகின்றன.  இந்த சூழலில் பழைய நடைமுறைகளை இந்தியா நம்பிக் கொண்டிருக்க முடியாது.  19 ஆம் நூற்றாண்டின் நடைமுறைகளை வைத்துக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டை நாம் எதிர்கொள்ள முடியாது.  இந்த வாரத்தில் பாதுகாப்புத் துறைக்கு தலைமை தளபதி  அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் மாற்றத்தை கொண்டு வருவார்.

மாற்றத்தை நோக்கிய நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, டிஆர்டிஓ-வின் கண்டுபிடிப்புகள் மூலம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.  அதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

 

நன்றி.