பி.எம்.இந்தியா
கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் திரு. என். தரம் சிங் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் திரு. என். தரம் சிங் மறைவு குறித்து அறிந்து கவலை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அன்னாரது குடும்பத்தினருடனும் அவருடய ஆதரவாளர்களுடனும் இருக்கின்றன.
திரு. என். தரம் சிங்கிற்கு கர்நாடக மாநிலம் மற்றும் தேசிய அரசியலில் நல்ல வளமான அனுபவம் உள்ளது. சமுதாயத்திற்கு அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவை என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
****
Saddened by the demise of former Karnataka CM Shri N. Dharam Singh. My thoughts are with his family & supporters in this sad hour: PM
— PMO India (@PMOIndia) July 27, 2017
Shri N. Dharam Singh had rich experience in Karnataka & national politics. His dedicated service towards society will be remembered: PM
— PMO India (@PMOIndia) July 27, 2017