பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை விமான நிலைய நிறுவனத்துக்கு சொந்தமான 2960.90 சதுர மீட்டர் நிலத்தை அதற்கு சமமான அளவில் உள்ள மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தோடு மாற்றிக் கொள்ள ஒப்புதல் அளித்தது. கல்லறையை இடமாற்றம் செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
தற்போது செய்து கொள்ளப்படும் இந்த நில மாற்றம், மும்பை விமான நிலைய வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற உதவும். மேலும் கல்லறை இடமாற்றம் செய்யப்படுவதால் அதை பயன்படுத்த முடியும். தற்போது மாற்றப்படும் விமான நிலைய ஆணையத்தின் நிலம் மற்றும் தனியார் நிலம் ஆகியவை ஒரே அளவில், அருகருகே அமைந்திருப்பதாலும், அதன் சந்தை விலை சமமாக இருப்பதாலும், இதனால் எந்த விதமான நிதிச் செலவினமும் கிடையாது. நிலம் மாற்றப்பட்ட பிறகு, அதன் வகைப்பாடை மாற்றுவதற்கு ஆகும் செலவுகளை மும்பை விமான நிலைய நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.