பி.எம்.இந்தியா
குஜராத் முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபானி புது தில்லியில் நாடாளுமன்ற இல்லத்தில் இன்று காலை பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். குஜராத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வரும் வெள்ள நிலவரம் குறித்து விவரித்தார்.
இன்று குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப்பின் மதியம் வடக்கு குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விமானம் மூலம் பார்வையிட பிரதமர் முடிவு செய்தார்.