பி.எம்.இந்தியா
குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். குடிமக்கள் இன்றைய நிர்வாகத்தின் மையமாக உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. குடியரசு, சமூக நீதியை முன்னெடுத்து செல்கிறது; பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது; இந்த முயற்சிகள் ஒன்றாக சேர்ந்து நலன் சார்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியல் சட்டப் பார்வையை நிலைநிறுத்துகின்றன என்றும் அது குறிப்பிடுகிறது.
மேற்கூறிய கட்டுரை குறித்து பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“குடிமக்கள் இன்றைய நிர்வாகத்தின் மையமாக உள்ளனர் என்பதைக் குடியரசு தினத்தன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் விரிவாகக் கூறியுள்ளார். குடியரசு, சமூக நீதியை முன்னெடுத்து செல்கிறது; பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது; இந்த முயற்சிகள் ஒன்றாக சேர்ந்து நலன் சார்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியல் சட்டப் பார்வையை நிலைநிறுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218809®=3&lang=1
***
TV/SMB/RK