Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


குடியரசு தினம் என்பது இந்தியாவின் சுதந்திரம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களின் வலுவான அடையாளம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நாட்டைக் கட்டமைக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஒன்றிணைந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்கு, இந்த தினம், தேசத்திற்குப் புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தருணத்தில், பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:

पारतन्त्र्याभिभूतस्य देशस्याभ्युदयः कुतःअतः स्वातन्त्र्यमाप्तव्यमैक्यं स्वातन्त्र्यसाधनम्॥”

இந்த சமஸ்கிருத சுபாஷிதம், சார்ந்திருக்கும் நிலை அல்லது அடிமைத்தனத்தின் கீழ் உள்ள ஒரு நாடு, முன்னேற்றம் அடைய முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. எனவே, சுதந்திரத்தையும், ஒற்றுமையையும், நமக்கு வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

சார்பு நிலை அல்லது அடிமைத்தனத்தின் கீழ் உள்ள ஒரு நாடு, முன்னேற்றம் அடைய முடியாது என்பதை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது. எனவே, சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே, நாட்டின்  முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218696&reg=3&lang=1

***

TV/SV/RK