பி.எம்.இந்தியா
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற 47-வது ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10.02.2016) உரையாற்றினார்.
தங்கள் நீண்ட அனுபவத்தின் காரணமாகவும் அந்த பதவியின் பெருமைமிகு பண்பின் காரணமாகவும் ஆளுநர்கள் தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த நிலையை வகிக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். எனவே ஆளுநர்கள் மாநிலங்களின் ஊக்க விசையாக செயல்பட முடியும் என்றும் மாநில அரசு செயல்பாடுகளை அவற்றில் பங்கேற்காமல் விரைவு படுத்தவும் மேம்படுத்தவும் அவர்களால் முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
உலகப் பொருளாதார நிலைமை பின்னடைந்து இருந்தாலும் உலக நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் தான் பொதுவாக முன்னேறிவரும் ஒரே பெரிய பொருளாதாரம் என்று பிரதமர் வலியுறுத்தினார். உலகம் இந்தியாவை கவனித்து வரும் நிலையில் உலகில் ஏற்படும் நிகழ்வுகளை இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டு இல்லாமல் முக்கிய பங்காற்றி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சமீபத்திய உலக அரங்குகளான பங்காளர்கள் மாநாடு 21 மற்றும் உலகப் பொருளாதார அமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்கு பணி இதற்கு உதாரணங்கள்.
கூட்டுறவு சமஷ்டி அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் இதனை எழுத்துபூர்வமாகவும் முழுமையான அர்த்தத்திலும் செயல்படுத்த வேண்டும் என்றார். மாநிலங்களும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து ‘இந்தியக் குழுவாக’ செயல்பட வேண்டும் என்றார் அவர். கூட்டுறவு சமஷ்டி அமைப்பு என்பது கூட்டுறவு போட்டித் தன்மைக் கொண்ட சமஷ்டி அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டு மாநிலங்களுக்கு இடையே மேம்பாடுக் குறித்த ஆரோக்கியமான போட்டியிடும் தன்மை ஏற்பட வேண்டும் என்றார்.
தாங்கள் பணி புரியும் மாநிலங்களில் தங்கள் பதவிக் காலம் முடிவடையும் போது தங்கள் பங்காக ஏதாவது ஒரு வகையில் நினைவு கூறதக்க மரபுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று ஆளுநர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Shared my thoughts at the Conference of Governors. https://t.co/i0zibmwrG7 pic.twitter.com/RuzdvaW6kH
— Narendra Modi (@narendramodi) February 10, 2016