Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளா கோவிலில் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. இரண்டு லட்சம் நிதி உதவியாக பிரதமர் அறிவிப்பு


கொல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

விபத்து ஏற்பட்ட பகுதியின் நிலவரம் குறித்து பிரதமர் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் அலுவலர்களுடனும் தொடர்பில் உள்ளார். விரைவில் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர், அவருடைய வருகையையொட்டி எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கவனம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் மட்டுமே இருக்கட்டும் என்று கூறியுள்ளார். பிரதமருடன் தீக்காய சிகிச்சை நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழுவினரும் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

***