Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய திரு மோடி, கேரளாவின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் முயற்சிகள் இன்று புதிய வேகம் பெற்றுள்ளது என்றார். கேரளாவில் ரயில் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், திருவனந்தபுரத்தை மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் மையமாக மாற்றுவதற்கு இத்தகைய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். பிரதமரின் ஸ்வநிதி கடன் அட்டை வெளியீட்டுடன் ஏழைகளின் நலனுக்கான நாடு தழுவிய முன்முயற்சி கேரளாவில் இருந்து தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் முன்முயற்சிகளுக்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் குறிப்பாக கேரள மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதி கடன் அட்டைகள் கேரளாவில் பத்தாயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் 600 பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். ஏற்கனவே வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த கடன் அட்டைகள் இப்போது சாலையோர வியாபாரிகளுக்கும் கிடைக்க உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் சிஎஸ்ஐஆர் புத்தாக்க மையத்தின் தொடக்கம், மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க அறுவை சிகிச்சை மைய தொடக்கம் ஆகியவை கேரளாவை அறிவியல், புத்தாக்கம் மற்றும் சுகாதாரத் துறையில் ஓர் மையமாக நிறுவுவதற்கு உதவும் என்று திரு மோடி தெரிவித்தார்.

அமிர்த பாரத விரைவு ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருப்பது கேரளாவின் ரயில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்றும் எளிதாகப் பயணம் செய்வதை விரிவுபடுத்தி சுற்றுலாத்துறைக்கு பயனளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குருவாயூருக்கும், திருச்சூருக்கும் இடையேயான பயணிகள் ரயில் சேவை யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் திரு வி சோமண்ணா, திரு ஜார்ஜ் கொரியன், திருவனந்தபுரம் மேயர் திரு வி வி ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217592&reg=3&lang=1

***

AD/SMB/RJ/KR