பி.எம்.இந்தியா
சிக்ஷாபத்ரி த்விஷாதப்தி பெருவிழாவில் காணொலிக்காட்சி மூலம் இன்று நிகழ்த்திய உரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பகவான் சுவாமி நாராயணனின் சிக்ஷாபத்ரியின் 200-வது ஆண்டினை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெறுவது பற்றி திரு மோடி எடுத்துரைத்தார். பகவான் சுவாமி நாராயணனை பின்பற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு சகாப்தங்களில் முனிவர்களும், துறவிகளும், சிந்தனையாளர்களும் காலத்தின் தேவைக்கேற்ப நமது பாரம்பரியத்திற்கு புதிய அத்தியாயங்களை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் கூறினார். பகவான் சுவாமி நாராயணனின் வாழ்க்கை என்பது பொதுக்கல்வி மற்றும் பொதுச் சேவையுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
பகவான் சுவாமி நாராயணனின் அனுபவம் எளிய வார்த்தைகளில் விளக்கப்பட்டுள்ளது. சிக்ஷாபத்ரி மூலம் வாழ்க்கைக்கு மதிப்புமிக்க வழிகாட்டுதல்களை பகவான் சுவாமி நாராயணன் வழங்கியுள்ளார். அவரது வாழ்க்கை ஆன்மீக நடைமுறை மற்றும் சேவைக்கு அடையாளமாக இருந்தது. அவரது தொண்டர்கள் தற்போது சமூகத்திற்கு, தேசத்திற்கு, மனித குலத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏராளமான முகாம்களை நடத்தி வருகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217625®=3&lang=1
***
AD/SMB/RJ/KR
LIVE. PM Modi's remarks during Shikshapatri Dwishatabdi Mahotsav. https://t.co/SplUf3mMq7
— PMO India (@PMOIndia) January 23, 2026