Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனிதமான வசந்த பஞ்சமி தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


புனிதமான வசந்த பஞ்சமி தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இயற்கையின் அழகு மற்றும் தெய்வீகத் தன்மைக்கு இந்த புனித விழா அரப்பணிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். அறிவு மற்றும் கலைத் தெய்வமான சரஸ்வதியின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.

சரஸ்வதி தேவியின் கருணையால் அனைத்து குடிமக்களும் கற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் அழியாத ஒளியை பெறுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

இயற்கையின் அழகு மற்றும் தெய்வீகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பண்டிகையான வசந்த பஞ்சமியில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அறிவு மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவியின் ஆசிகளை அனைவரும் பெறட்டும். அவரது அருள் என்றென்றும் அனைவரின் வாழ்க்கையையும் அறிவு, ஞானம் மற்றும் அறிவுத்திறனால் ஒளிரச் செய்யட்டும், இதுவே எனது விருப்பம்.”

***

(Release ID: 2217529)

AD/SMB/RJ/KR