Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொரியாவில் இருந்து முதன்மைச் செயல் அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு

கொரியாவில் இருந்து முதன்மைச் செயல் அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு


கொரியாவிலிருந்து மூத்த முதன்மை செயல் அலுவலர்கள் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்கள் இந்திய-கொரிய வர்த்தக உச்சி மாநாட்டிற்காக புதுதில்லி வந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முதன்மை செயல் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினார்கள். கொரிய தொழில் துறையின் நிபுணத்துவம் மற்றும் வரன்முறைகளை பாராட்டிய பிரதமர் அதன் காரணமாகவே கொரிய பிராண்டுகளின் பெயர்கள் இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தும் பெயர்களாக மாறியுள்ளன என்றார்.

கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பெரிய கொரிய நிறுவனங்கள் கொரியாவில் பின்பற்றும் முறையைப் போலவே இந்திய பிராந்தியத்திலும் ஒரு குழுவாக முதலீடு செய்ய திட்டமிடலாம் என்றும் பிரதமர் ஆலோசனைக் கூறினார்.

****