Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை விற்க ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 0.99 ஏக்கர் நிலத்தை 19.81 கோடி விலைக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது.

பின்னணி

கோவை பங்கஜா மில்ஸ் சாலையில் உள்ள ஒரு ஏக்கர் அளவுள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்துக்கு 19.81 கோடிக்கு விற்பனை செய்ய ஏர் இந்தியா முடிவெடுத்தது. உலோகம் மற்றும் உதிரிப் பொருள் விற்பனைக் கழகம் மூலமாக மின்னணு முறையில் டெண்டர் விடப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், வரியல்லாத அதன் வருமானத்தை பெருக்கும் பொருட்டும், பயன்படாத அதன் சொத்துக்களை விற்பனை மூலமும், லீஸுக்கு விடுவதன் மூலமும், கூட்டுத் தொழில மூலமும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இந்த நிலம், தேசிய கட்டிடக் கட்டுமானக் கழகத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

***