Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சைபர் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


சைபர் பாதுகாப்புத் துறையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணிணி அவசர பொறுப்பு குழு (CERT-in) மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையும் செய்துகொண்டுள்ள ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் 2017 ஜனவரி 11ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தானது.

தொடர்புடைய சட்டங்கள், விதிகள், வறன்முறையின் கீழ் சமத்துவம் மற்றும் இருதரப்புக்கும் பயன் கிட்டும் வகையில் சைபர் பாதுகாப்பு குறித்த நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.  

 

*****