Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சைப்ரஸ் அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற பத்திரிக்கை அறிக்கை கூட்டத்தில் பிரதமர் மோடி அளித்த அறிக்கை

சைப்ரஸ் அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற பத்திரிக்கை அறிக்கை கூட்டத்தில் பிரதமர் மோடி அளித்த அறிக்கை

சைப்ரஸ் அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற பத்திரிக்கை அறிக்கை கூட்டத்தில் பிரதமர் மோடி அளித்த அறிக்கை


மேதகு சைப்ரஸ் அதிபர் அவர்களே,

பெருமைக்குரிய பிரமுகர்களே,

ஊடக நண்பர்களே,

முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேதகு அதிபர் அவர்களை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சைப்ரஸ் நாட்டின் ஒவ்வொரு அதிபர் மனத்திலும் இந்தியாவிற்கு என்றுமே ஒரு சிறப்பு இடம் உள்ளது. கிட்டத்தட்ட அனைவருமே இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். அதனால், இந்தியாவின் சிறந்த நண்பரும் வலிமையான துணைவருமான அதிபரை வரவேற்பது எனக்குப் பெருமையை அளிக்கிறது. சைப்ரஸ் மற்றும் இந்தியா பண்டைய நாகரீகங்களின் மரபுகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த பழம் பெரும் நாகரீகங்கள் ஆயிரம் ஆண்டுகளாக இருநாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நவீன காலங்களில், நமது உறவு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், எங்களது தந்தையர்கள் சைப்ரஸின் சுதந்திர போராட்டத்தை ஆதரித்ததில் இருந்து தொடர்கிறது. அதேபோல், சைப்ரஸ் நாடும், அதன் கனிவு மற்றும் நட்பினை என்றுமே பரிமாறி வருகிறது. சைப்ரஸ் நாட்டின் முக்கிய தருணத்தில் இந்தியா என்றுமே துணை நின்றுள்ளது. சைப்ரஸ் குடியரசின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக துணை நிற்க இந்தியா 1974 ஆம் ஆண்டு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. சைப்ரஸ் நாட்டில் ஐ.நா அமைதி காக்கும் படைக்காக இந்திய வீரர்களை அளித்தது. இது தொடர்பாக இந்தியா முப்படை வீரர்களையும் அளித்தது. மேலும், இவர்கள் அனைவரும் இன்றளவும் சைப்ரஸ் நாட்டினால் நினைவு கூறப்படுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு அதிபர்களே,

சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து நான் அறிவேன். அமைதி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக புதிய யுகத்தை அமைக்க உங்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள். இந்த முயற்சி சைப்ரஸ் நாட்டிற்காக மட்டும் அல்ல, மொத்த கண்டத்திற்காகவும் தான். இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி அடைய நாங்கள் வாழ்த்துகிறோம். உங்களது தலைமை, சமீபத்தில் ஏற்பட்ட நிதி மற்றும் வங்கி தொடர்பான சவால்களை சைப்ரஸ் நாடு வெற்றிகரமாக சமாளித்தது. மேலும், 2016 ஆம் ஆண்டில் ஐரோ பகுதியில் அதிகப்படியான வளர்ச்சி விகிதங்கள் பெற்ற நாடுகளில் ஒன்றாக சைப்ரஸ் நாடு இடம் பிடித்துள்ளது. உங்களது நாட்டினை பிரச்சினைகளில் இருந்து வெளி எடுத்து பொருளாதார வளம் ஈட்டும் பாதையில் நீங்கள் நடத்தி செல்லும் உங்களது ஆளுமை மற்றும் தொலைநோக்குப் பார்வையை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம்.

நண்பர்களே,

இன்று, அதிபரும் நானும் விரிவான விவாதத்தை மேற்கொண்டோம். எங்களது இந்த உரையாடல் இருதரப்பு உறவின் அனைத்து அம்சத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. பரஸ்பர கவலை தரக்கூடிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இருவரின் கண்ணோட்டங்களை பகிர்ந்துகொண்டோம். இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே மிக நெருங்கிய பொருளாதார உறவு உள்ளது. இந்தியாவில் முதலீட்டாளர்கள் பட்டியலில் சைப்ரஸ் நாடு 8 வது இடத்தில் உள்ளது. நமது மூலதனம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை மேலும் வலுப்படுத்த கடந்த ஆண்டு இரட்டை வரி விலக்கு தவிர்ப்பு ஒப்பந்தத்தை நாம் திருத்தினோம். சைப்ரஸ் நாட்டின் தொழில் முனிவர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு வாய்ப்பினை இந்தியா அளிக்கிறது என்பதை அதிபரும் நானும் ஒப்புக்கொண்டோம். எனது அரசால் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்கள் நமது இரு நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள தொழில் மற்றும் வணிக உறவுகளை இன்னும் மேற்கொள்ளும். சைப்ரஸின் அழகிய இயற்கை வளம் மற்றும் “இன்கிரிடிபிள் இந்தியா” திட்டத்தின் அதிகபடியான வாய்ப்புகள் இரு நாட்டின் சுற்றுலா துறையினையும் ஊக்கப்படுத்தும்.

நண்பர்களே,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற பொதுக் கொள்கையை இந்தியாவும் சைப்ரஸ் நாடும் பகிர்ந்துகொண்டுள்ளது. இன்றைய உலகில் ஏற்படும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தம் இன்றைய உலகின் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் தவிர முந்தைய உலகின் பிரதிபலிப்பாக இருக்க கூடாது என்பதை இருவரும் வலுவாக நம்புகிறோம். அதிபர் அவர்களே, இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் நிரந்த உறுப்பினர் அந்தஸ்த்தை கோரும் இந்தியாவின் கோரிக்கைக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன். அரசாங்க அமைப்புகள் மற்றும் ஆட்சிகள் குறித்த மற்ற பிரிவுகளில் உள்ள இரு நாட்டின் உறவினை வலுப்படுத்துவது குறித்தும் அதிபரும் நானும் விவாதித்தோம்.

நண்பர்களே,

அதன் இடத்தைகொண்டு, உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பயங்கரவாதம் முன்வைக்கும் அச்சுறுத்தலை சைப்ரஸ் நாடும் நன்கு அறிந்துள்ளது. இந்தியாவே பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருகிறது. நமது கண்டங்களில் தீவிரவாத தொழிற்சாலைகளை உருவாக்கும், ஆதரவு அளிக்கும், தங்குமிடம் அளிக்கும் மற்றும் உதவும் நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உறுதியாக செயல்படவேண்டியது மிக அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இது குறித்து விரிவான உலகளாவிய சட்ட கட்டமைப்பு குறிப்பாக சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான விரிவான மாநாடு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று அதிபரும் நானும் விவாதித்தோம்.

அதிபர் அவர்களே,

நமது இருதரப்பு உறவினை புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வலுவான உறுதிப்பாட்டினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று நாம் மேற்கொண்ட விவாதங்கள் மற்றும் முடிவுகள் நமது உறவிற்கு புதிய பாதையையும் வலிமையையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். நான் மீண்டும் ஒருமுறை உங்களை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உங்களின் இந்தப் பயணம் நல்ல பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி.

மிக்க நன்றி.