பி.எம்.இந்தியா
துருக்கி நாட்டின் அன்டல்யாவில் நடந்துவரும் ஜி-20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு. மால்கம் டர்ன்புல்-ஐ சந்தித்து பேசினார்.
இந்தியா ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் அனைத்து செயல்முறைகளும் முடிவடைந்துவிட்டதாக இரு பிரதமர்களும் அறிவித்தனர். நிர்வாக பணிகள் உட்பட அனைத்து செயல்முறைகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும். திரு. மால்கம் டர்ன்புலுக்கு நன்றி தெரிவித்த திரு. நரேந்திர மோடி இந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒரு மயில்கல்லாக அமையும் என்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு. டொனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திரு. ஜீன் கிலாவ்ட் ஜுன்க்கர் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
PM @TurnbullMalcolm & I had our first meeting. We had wide ranging talks on bilateral & global issues. pic.twitter.com/XjgwRMc6sN
— Narendra Modi (@narendramodi) November 15, 2015
PM @narendramodi and PM @TurnbullMalcolm discuss India-Australia relations in their first bilateral meeting. pic.twitter.com/eeEkqgu4ha
— PMO India (@PMOIndia) November 15, 2015