Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தண்டனை அளிக்கப்பட்ட நபர்களை இடம் மாற்றம் செய்து கொண்டு வருவதற்கான ஐரோப்பிய சபை உடன்பாட்டிற்கு ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்கண்டவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

(I) தண்டனை அளிக்கப்பட்ட நபர்களை இடம் மாற்றம் செய்து கொண்டு வருவதற்கான ஐரோப்பிய சபையின் உடன்பாட்டை இந்தியா பெறுவதற்கு ஐரோப்பிய சபைக்கு கடிதம் ஒன்றின் மூலம் முறையான வேண்டுகோள் அனுப்புவது.

(II) ஐரோப்பிய சபையிடமிருந்து முறையான அழைப்பு பெற்றவுடன் இந்த உடன்பாட்டில் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு தண்டனை பெற்ற நபர்கள் கொண்டு வரும் உடன்பாட்டை செயல்படுத்துதல்.

தண்டனை பெற்ற நபர்களை கொண்டு வருவதற்கான ஐரோப்பிய சபையின் பல தரப்பு உடன்பாட்டில் சேருவதன் மூலம் இந்த அமைப்பில் உள்ள 64 நாடுகளுடன் இது தொடர்பாக தனித்தனியாக இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுவது தவிர்க்கப்படுகிறது. இந்த உடன்பாட்டில் சேருவதால் ஐரோப்பிய சபையின் நாடுகளில் சிறையில் உள்ள இந்தியர்கள் தங்கள் தண்டனையின் எஞ்சிய காலத்தை தங்கள் குடும்பங்களுக்கு அருகில் அனுபவிக்க வகை செய்யப்படுகிறது. இதன் மூலம் இத்தகையோரின் சமுதாய மறுவாழ்வு நடைமுறைகள் எளிதாக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.

பின்னணி

தண்டனை பெற்ற நபர்களை கொண்டு வருவதற்கான ஐரோப்பிய சபை உடன்பாடு 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி ஏற்பட்டது. இது 1985ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதுவரை மொத்தம் 64 நாடுகள் இந்த உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

2004ஆம் ஆண்டிற்கு முன்னதாக வெளிநாட்டு கைதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்டனையின் எஞ்சிய காலத்தை அங்கு அனுபவிக்க எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. அதேபோல, இந்திய வம்சாவழி கைதிகள் வெளிநாட்டு நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தால் அவர்கள் தண்டனை காலத்தை இந்தியாவில் அனுபவிக்கவும் இயலாமல் இருந்தது. மனிதநேய அடிப்படையில் இந்தியச் சிறைகளில் உள்ள வெளிநாட்டவரை அவர்களது சொந்த நாடுகளுக்கும், வெளிநாட்டுச் சிறைகளில் இருக்கும் இந்தியக் கைதிகளை இந்தியாவுக்கும் கொண்டு வந்து தண்டனையின் எஞ்சிய காலத்தை அவரவர் நாடுகளிலேயே அனுபவிக்கச் செய்வது, அவர்களது குடும்பத்தினர் அவர் அருகில் இருப்பதற்கு உதவுவதுடன் அவர்களது மறு வாழ்வுக்கும் பேருதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது.

எனவே, 2003ஆம் ஆண்டு கைதிகளை திரும்பக் கொண்டுவரும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்ற இந்த வகையில் பரஸ்பரம் அக்கறையுள்ள நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம்.

இதுவரை 27 நாடுகளுடன் இத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பல தரப்பு ஒப்பந்தமான இண்டர் அமெரிக்கன் உடன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இண்டர் அமெரிக்கன் உடன்பாடு அமெரிக்க அரசுகள் அமைப்பு உறுப்பு நாடுகளிடையே கையெழுத்தானது என்றாலும் இந்த அமைப்பு சாராத நாடுகளுக்கும் அது அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா இந்த வகையில் 36 நாடுகளுடன் செயல்பாட்டு அளவில் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. (பல தரப்பு உடன்பாட்டின்படி 20 நாடுகள் மற்றும் இண்டர் அமெரிக்கா உடன்பாட்டின்படி 16 நாடுகள்) அவையாவன; பிரிட்டன், மொரீஷியஸ், பிரான்ஸ், பல்கேரியா, எகிப்து, தென்கொரியா, வங்காளதேசம், இலங்கை, கம்போடியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரெட், ஈரான், இத்தாலி, மாலத்தீவுகள், துருக்கி, தாய்லாந்து, ரஷ்யா, குவைத், ஹாங்காங், அர்ஜென்டினா, பெலீஷ், கனடா, செக் குடியரசு, சிலி, கோஸ்டா ரிகா, ஈக்வெடார், எல் சால்வடார், குவாதிமலா, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, அமெரிக்கா, உருகுவே மற்றும் வெனிசூலா.

*****