பி.எம்.இந்தியா
‘வளர்ச்சியும் பாரம்பரியமும் ‘ என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டது திரிபுரா தனது வளர்ச்சிப் பயணத்தில் விரைவான வேகத்தைப் பெற எவ்வாறு உதவியது என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தியுள்ளார்.
திரிபுராவிற்கு அண்மையில் மேற்கொண்ட பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியாவின் சமூக வலைதள பதிவிற்கு பதிலளித்த அவர், மாநிலத்தின் மாறிவரும் நிலைமையையும் அதன் மகத்தான ஆற்றலையும் எடுத்துரைத்துள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி , அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் கொண்டாடுவதிலும் திரிபுரா முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“‘வளர்ச்சியும் பாரம்பரியமும் ‘ என்ற மந்திரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், திரிபுரா விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது; ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பதிவு செய்கிறது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா @JM_Scindia, திரிபுராவிற்கு மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். மாநிலத்தின் மாறிவரும் நிலைமையையும் மகத்தான ஆற்றலையும் விவரித்துள்ளார். அவரது கட்டுரையைப் படியுங்கள்…”
(Release ID: 2222494)
****
TV/SMB/SH
‘विकास भी, विरासत भी’ के मंत्र को आत्मसात करते हुए त्रिपुरा विकास की तेज रफ्तार पकड़ चुका है और हर दिन नई-नई उपलब्धियां दर्ज कर रहा है। केंद्रीय मंत्री @JM_Scindia जी ने त्रिपुरा प्रवास के अपने अनुभवों को साझा करते हुए राज्य की बदलती तस्वीर और अपार संभावनाओं के बारे में विस्तार… https://t.co/Zo8qIz66Fd
— PMO India (@PMOIndia) February 3, 2026