பி.எம்.இந்தியா
இந்திய இளைஞர்களின் கூட்டுணர்வையும் உரையாடலையும் காண்பதற்கு 2026 பிப்ரவரி 6-ம் தேதியன்று நடைபெறும் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்பு பகுதியைக் காணவருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்வு காலம் காரணமாக தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் பிரதமர் மீண்டும் உரையாடினார். இந்த ஆண்டு உரையாடல்கள் தில்லியில் நெ.7 லோக் கல்யாண்மார்க், குவஹாத்தி, ரெய்ப்பூர், கோயம்புத்தூர், தேவ் மோர்கா ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இந்த அனுபவம் குறித்து விவரித்துள்ள பிரதமர், இந்த உரையாடல் புத்துணர்ச்சியூட்டும் வகையிலும் ஊக்கமளிக்கும் வகையிலும் இருந்ததாக கூறியுள்ளார். மாணவர்களின் உற்சாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தமற்ற தேர்வுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சவால்களை எதிர்கொள்வது, சமநிலையைப் பராமரிப்பது, தன்னம்பிக்கையை வளர்ப்பது குறித்த நடைமுறை கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தேர்வு காலம் நெருங்குவதால், தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்வு மீண்டும் நடைபெறுகிறது.
இம்முறை தேர்வு வீரர்களுடனான உரையாடல் தில்லியில் 7 எல்கேஎம், குவஹாத்தி, ரெய்ப்பூர், கோயம்புத்தூர், தேவ் மோஹ்ரா ஆகிய இடங்களில் நடைபெற்றது. எப்போதும் போல் எனது இளைய நண்பர்கள் உடனான இந்த உரையாடல் புத்துணர்ச்சியூட்டுகிறது. மனம் அழுத்தம் இல்லாத தேர்வுகள் மற்றும் இதர அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்வுக்கு தயாராவோம் உரையாடல் நிகழ்ச்சியை பிப்ரவரி 6 அன்று காணவும்!”.
*
(Release ID: 2222497)
****
TV/IR/KPG/SH
As the Parikshas are approaching, #ParikshaPeCharcha is back too!
— Narendra Modi (@narendramodi) February 3, 2026
This time, the Charcha happened with #ExamWarriors in Devmogra, Coimbatore, Raipur, Guwahati and at 7, LKM in Delhi. As always, it is refreshing to interact with my young friends and discuss stress free exams… pic.twitter.com/HOEmDZIR7B