Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திறன் மேம்பாடு மற்றும் கல்வித் தகுதிகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்காக இந்தியாவின் திறன்மேம்பாடு-நிறுவன ஆளுமை அமைச்சகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுகு இடையேயான நோக்கத்திற்கான கடிதம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித்து


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் திறன் மேம்பாடு மற்றும் நிறுவன ஆளுமைக்கான அமைச்சகம் –ஐக்கிய அரபு எமிரேட்ஸ் –இன் கல்வித் தகுதிக்கான ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த 10.02.2016 அன்று கையெழுத்தான நோக்கத்திற்கான கடிதத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.

இந்த நோக்கத்திற்கான கடிதம் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்பதோடு, திறன் மேம்பாடு மற்றும் கல்வித் தகுதிக்கான அங்கீகாரம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பிற்கும் வழிவகுக்கும்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் திறன் மேம்பாடு மற்றும் நிறுவன ஆளுமைக்கான அமைச்சகம் –ஐக்கிய அரபு எமிரேட்ஸ் –இன் கல்வித் தகுதிக்கான ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே திறன் மேம்பாடு மற்றும் கல்வித்தகுதிகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றுக்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடுவதற்கான தனது அனுமதியையும் அமைச்சரவை வழங்கியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையே திறன் மேம்பாடு மற்றும் கல்வித்தகுதிக்கான அங்கீகாரம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இல் வெளிநாட்டவருக்கான வேலைகளில் தொழிலாளர்கள் சென்று வரவும், திறன்மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான பணியிடங்கள் ஆகியவற்றுக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவி செய்வதாக அமையும்.