Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துருக்கி நாட்டில் நடைபெற்ற எப்.ஐ.எஸ். சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவிற்கு முதல் முறையாக சர்வதேச பதக்கம் வென்ற ஆன்ச்சல் தாகூருக்கு பிரதமர் வாழ்த்து.


துருக்கி நாட்டில் சர்வதேச பனிச்சறுக்கு சம்மேளனம் (எப்.ஐ.எஸ்.) நடத்திய சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவிற்கு முதல் முறையாக பதக்கம் வென்ற ஆன்ச்சல் தாகூருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் பதக்கம் வென்றதற்காக ஆன்ச்சல் தாகூருக்கு எனது வாழ்த்துகள்! துருக்கி நாட்டில் நடைபெற்ற எப்.ஐ.எஸ். சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் நீங்கள் செய்துள்ள வரலாற்று சாதனையால் நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. உங்கள் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****