Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தென் ஆப்பிரிக்காவுடனான, அடிப்படைநிலை கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.


இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உள்ள ஒத்துழைப்பின் ஒரு அம்சமாக, அடிப்படைநிலை கண்டுபிடிப்புகளிலும் ஒத்துழைப்பை நிறுவும் நோக்கில் 2016, ஜூலை7ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப்பற்றி பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் பயிலரங்கங்கள், பயிற்சிப்பட்டறைகள், வகுப்புகள் ஆகியவற்றை இணைந்து நடத்தும். பொதுவள தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வதோடு, புதிய கண்டுபிடிப்புகளை வணிகரீதியிலும் செல்லுபடியாகும் கண்டுபிடிப்புகளாக மாற்றவும், கூட்டு தொழில்நுட்ப வளர்ச்சியில் உதவவும், தொழில்நுட்பங்களை சமூக பயன்பாட்டுக்கு உதவும் வகையில் மாற்றவும் அந்தந்த துறை வல்லுனர்களோடும், தொழிற்சாலைகளோடும் இணைந்து இருநாடுகளும் திட்டங்களை உருவாக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளிலும் அடிப்படைநிலை கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைப்பையும் ஊக்குவிக்கும் சூழலை, குறிப்பாக குறிப்பாக உள்நாட்டு அறிவுசார் அமைப்பிலும், விவசாய உயிரிதொழில்நுட்பத் துறையிலும் உருவாக்கும்.