பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் மகளிர் சக்தி போற்றப்படும் வேளையில், பாரதத்தின் கதை அதன் பெண்களின் வலிமையால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அது ஒரு வளமான வரலாற்று மரபிலிருந்து வந்துள்ளது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது என பிரதமர் கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் பராமரிப்புப் பொருளாதாரம் ஒரு முக்கிய அடித்தளமாகும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தல பதிவில் கூறியிருப்பதாவது:
“நாடு நமது மகளிர் சக்தியைக் கொண்டாடும் வேளையில், மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, பாரதத்தின் கதை அதன் பெண்களின் வலிமையால் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், இது ஒரு வளமான வரலாற்று மரபிலிருந்து வந்துள்ளது என்றும் எழுதியுள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்தில் பராமரிப்புப் பொருளாதாரம் ஒரு முக்கிய அடித்தளம் என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.”
***
(Release ID: 2236302)
TV/PLM/RK
As the nation celebrates our Nari Shakti, Union Minister Smt. @Annapurna4BJP writes that Bharat’s story has been shaped by the strength of its women, drawing from a rich historical legacy.
— PMO India (@PMOIndia) March 7, 2026
She highlights that the care economy is an important foundation in our journey towards… https://t.co/oRdC20T82L