Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மக்கள் மருந்தக தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்


பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மக்கள் மருந்தக தினம் 2026-ஐ முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்கள் மருந்தக மையங்கள் மூலம், எண்ணற்ற குடும்பங்கள் மருந்துகளுக்கான செலவுகளை மிச்சப்படுத்தி, சிறந்த சிகிச்சையைப் பெறுகின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மக்கள் மருந்தக தினம் 2026-ல் எனது நல்வாழ்த்துகள். இந்த முயற்சி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், எண்ணற்ற குடும்பங்கள் மருந்துகளுக்கான செலவுகளைச் சேமித்து முறையான சிகிச்சையைப் பெறுகின்றன.”

***

(Release ID: 2236248)

TV/PLM/RK