Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பத்திரிகை தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

தேசிய பத்திரிகை தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

தேசிய பத்திரிகை தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு


தேசிய பத்திரிகை தினத்தைக் குறிக்கும் வகையில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா புது தில்லியில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். இந்திய பிரஸ் கவுன்சிலின் பொன் விழாவை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பத்திரிகை சுதந்திரத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தினார். பத்திரிகைகள் தாங்களே தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வெளியில் இருந்து வரும் குறுக்கீடுகள் அல்லது கட்டுப்பாடுகள் தேவையற்ற ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சில பகுதிகளில் பத்திரிகையாளர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், உண்மையை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் பத்திரிகையாளாகள் கொல்லப்படுவது மிகவும் தீவிரமான முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டார்.

***