Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை


தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.) உள்ள மாணவர்கள் நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தங்களது வாழ்க்கையை அர்பணிக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். தேசிய மாணவர் படை பேரணிக்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்களிடம் உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார். குடியரசு தின விழாவிற்காக கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்கியுள்ள இந்த மாணவர்கள் இந்த விழா ஏற்பாட்டின்போது நடந்த நல்ல விஷயங்களை மனதில் ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். தேசிய மாணவர் படை நாட்டின் வெவ்வேறு கோடியில் உள்ள மாணவர்களை ஒன்று சேர்க்கிறது. இதன் மூலம் நம் நாட்டின் ஒருமைப்பாடு உருதியடைகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார்..

இந்த குடியரசுத் தினம் நமது இந்திய அரசியமைப்பு சட்டத்தின் வடிவமைப்பாளர் பாபா சாஹேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையும் குறிக்கிறது. தன் வாழ்வு முழுவது பல பிரச்சனைகளை சந்தித்தபோதிலும் தன் அயரா உழைப்பு மூலம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர், என்று பிரதமர் கூறினார்.


***