Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மக்கள் இயக்கமாக மாறியுள்ளதை விளக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நாட்டின் கல்விப் பயணத்தில் ஒரு உறுதியான மாற்றத்தைக் குறிப்பதுடன் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு வழி வகுக்கும் வகையில் நடத்தப்படும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற தேர்வு குறித்த கலந்துரையாடல், எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.02.2026) பகிர்ந்துள்ளார்.

 

இது தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவரது கட்டுரையைப் பகிர்ந்து வெளியிட்ட பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், பரிக்ஷா பே சர்ச்சா எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்பதையும், இது பாரதத்தின் கல்விப் பயணத்தில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதையும், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு எவ்வாறு வழி வகுத்துள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.

 

குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அறிவு அமைப்புகளுக்கும் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், 21-ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – 2020 அமைந்துள்ளது என்று அமைச்சர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.”

 

(Release ID: 2223679)

****

TV/PLM/SH