பி.எம்.இந்தியா
கொழும்பில் உள்ள புனித கங்காராமய புத்த விகாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்களைப் பொதுமக்கள் வழிபடுவதற்குத் திறந்து வைத்ததற்காக இலங்கை அதிபர் திரு அனுர குமார திசாநாயக்கவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2025-ல் இலங்கைக்குத் தாம் பயணம் செய்தபோது, இந்த புனித நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று முடிவு செய்யப்பட்டதையும், இதன் மூலம் மக்கள் மரியாதை செலுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றால் ஆழமான நாகரிக, ஆன்மீக உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை திரு மோடி எடுத்துரைத்துள்ளார். புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த ஆன்மீக பிணைப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.
பகவான் புத்தரின் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை பற்றிய காலத்தால் அழியாத செய்தி, எல்லைகளைக் கடந்து ஒற்றுமையையும் புரிதலையும் வளர்த்து, அதன் மூலம் மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கொழும்பிலுள்ள புனித கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களைப் பொது மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைத்தமைக்காக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றி.
2025 ஏப்ரலில் எனது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இவற்றை இலங்கை மக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. நமது நாடுகள் ஆழமான நாகரீக, ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. புத்த பெருமானின் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும். @anuradisanayake”
***
(Release ID: 2223538)
TV/PLM/RK
Gratitude to President Anura Kumara Dissanayake for inaugurating the Exposition of the Holy Devnimori Relics at the sacred Gangaramaya Temple in Colombo.
— Narendra Modi (@narendramodi) February 5, 2026
During my visit in April 2025, it was decided these relics will come to Sri Lanka, thus giving the opportunity for the… https://t.co/rLGTRudlsZ
කොළඹ, ගංගාරාම විහාරස්ථානයේ දී පූජනීය දෙව්නිමෝරි ධාතු ප්රදර්ශනය විවෘත කිරීම සම්බන්ධයෙන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මැතිතුමාට කෘතඥතාවය පළ කරමි.
— Narendra Modi (@narendramodi) February 5, 2026
මාගේ 2025 අප්රේල් සංචාරය අතරතුරදී මෙම ධාතුන් වහන්සේලා ශ්රී ලංකාවට වැඩම කරවන බවට තීරණය කරන ලද අතර ඒ අනුව ජනතාවට ධාතුන් වහන්සේලා… https://t.co/rLGTRudlsZ
கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) February 5, 2026
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில்… https://t.co/rLGTRudlsZ