Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. சன்வர் லால் ஜாட் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. சன்வர் லால் ஜாட் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய முன்னாள் அமைச்சருமான திரு. சன்வர் லால் ஜாட் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். பா.ஜ.க. மற்றும் தேசத்திற்கு இது பெரிய இழப்பாகும். எனது இரங்கல்கள்

திரு. சன்வர் லால் ஜாட் கிராமங்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக தீவிரமாக பாடுபட்டவர். இந்த சோகமான தருணத்தில் எனது சிந்தனைகள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.