Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நீர் பாதுகாப்பு குறித்த துறைசார் உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வு – பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 செப்டம்பர் 2), புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில், மாலை சுமார் 4:30 மணியளவில் நடைபெறும் ஜல் சக்தி அமைச்சகத்தின் துறைசார் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

2026 செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறும் இந்த இரண்டு நாள் துறைசார் உச்சிமாநாடு, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்திய ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும், கூட்டுறவு கூட்டாட்சியை ஆழப்படுத்தவும், தேசிய முன்னுரிமைகளின் மீதான கூட்டு உறுதியை வளர்க்கவும் பிரதமரால் திட்டமிடப்பட்ட துறைசார் உச்சிமாநாடுகளின் வரிசையில் இது முதலாவதாகும். இந்த முன்முயற்சியானது, முக்கியத் துறைசார் முன்னுரிமைகள் குறித்து கூட்டாக விவாதிப்பதற்கும், அவற்றின் செயலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை வழங்குகிறது.

இந்த உச்சிமாநாடு, மத்திய – மாநில அரசுகளின் தலைவர்களையும், மூத்த அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, முக்கிய முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், செயலாக்கச் சவால்களுக்குத் தீர்வு காணவும், காலவரையறைக்குட்பட்ட செயல் திட்டங்களை வகுக்கவும் வழிவகுக்கும். இந்த முன்முயற்சி, தேசிய இலக்குகளுக்கான கூட்டுப் பொறுப்பை ஊக்குவிப்பதையும், இந்த விவாதங்கள் ஆளுகையிலும் சேவை வழங்குதலிலும் மேம்பாடுகளாக மாறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உச்சிமாநாடு நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்:

* நீர் உள்கட்டமைப்பு திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல்

* மழை நீர் சேகரிப்பு

* குடிநீர் அமைப்புகளின் நிலைத்தன்மை

* ஜல் ஜீவன் இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு

இந்த ஆலோசனைகளின் விளைவாக, நீர் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்துதல், நீர் சேமிப்பில் பொதுமக்களின் பங்கேற்பை மேம்படுத்துதல், நிலையான குடிநீர் ஆதாரங்களை உறுதி செய்தல், கிராமப்புற குடிநீர் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான உறுதியான, காலவரையறைக்குட்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305533&reg=3&lang=1

—–

SS/PLM/SH