Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டை 5 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்திய பங்குச் சந்தைகளில், பங்குச் சந்தைக்கும், சேமிப்பு மையத்திற்கும், வங்கி நிறுவனத்திற்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும், பண்டமாற்று சந்தைக்கும் அந்நிய முதலீட்டை 5%இல் இருந்து 15% ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் இரண்டாம் கட்ட விற்பனையில் மட்டுமல்லாமல், முதலாவது ஒதுக்கீட்டிலும் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலக வர்த்தகத்தில் இந்தியப் பங்குச்சந்தை நவீன தொழில்நுட்பங்களையும், சமகால உலக நடைமுறைகளையும் தனதாக்கி சிறப்பாக போட்டியிடவும், அதன்மூலம் இந்திய முதலீட்டுச் சந்தை பன்மடங்கு வளர்ச்சி பெறவும், முன்னேறவும் இந்த நடவடிக்கை உதவும்.

2016-2017ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அந்நிய முதலீட்டில் செய்யப்பட இருக்கும் மாற்றங்களில் ஒன்றாக இந்திய பங்குச்சந்தையில் உள்ளூர் முதலீடுகளுக்கு சமமாக, அந்நிய முதலீடு 5%இல் இருந்து 15%ஆக உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி அறிவித்ததை நிறைவேற்றும் விதமாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

***