Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தரம்ஷீல் சதுர்வேதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மதிப்புக்குரிய புகழ்பெற்ற சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான பண்டிட் தரம்ஷீல் சதுர்வேதி மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“காசியில் இருந்து சோகமான செய்தி வரப் பெற்றேன். மதிப்புக்குரிய புகழ்பெற்ற சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான பண்டிட் தரம்ஷீல் சதுர்வேதி மறைந்துவிட்டார். அவரது மறைவிற்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்டிட் தரம்ஷீல் சதுர்வேதியின் கூர்மையான வார்த்தைகளில் அமைந்துள்ள எழுத்துகள், நகைச்சுவைகள் போன்றவை பலதரப்பு வாசகர்களிடம் அன்பைப் பெற்றுத் தந்துள்ளன. அவரை இழந்து வாடுகிறோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

****