பி.எம்.இந்தியா
குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்படப் பிரிவில் பூங் திரைப்படத்திற்கு பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனம் பாஃப்தா விருது அறிவித்துள்ளது.
இதற்காக பூங் திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனை குறிப்பாக மணிப்பூருக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணம் என்று கூறியுள்ளார்.
இந்த விருது நாட்டின் படைப்பாற்றல் திறனை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பாஃப்தா வெளியிட்டுள்ள பதிவிற்கு திரு மோடி பதிலளித்திருப்பதாவது;
“இத்திரைப்படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த சாதனை குறிப்பாக மணிப்பூருக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய உண்மையான தருணம். இது நமது நாட்டின் பெரும் படைப்பாற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.”
***
(Release ID: 2231794)
AD/IR/LDN/SH
Congratulations to all those associated with this film. This is indeed a moment of immense joy, especially for Manipur. It also highlights the immense creative talent in our nation. https://t.co/fd95WriuTG
— Narendra Modi (@narendramodi) February 23, 2026