Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிம்ஸ்டெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

பிம்ஸ்டெக் நாடுகளின் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு


பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி இயக்கத்தை (பிம்ஸ்டெக்) சேர்ந்த உறுப்பினர் நாடுகளின் தேசியப் பாதுகாப்பு தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினர்.

பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு தலைவர்கள், பிம்ஸ்டெக் குறித்து பிரதமருக்கு இருக்கும் தொலை நோக்கு பார்வையை வெகுவாக பாராட்டினர். தேசிய பாதுகாப்பு தலைவர்களின் சந்திப்பு கூட்டத்தை முதல் முதலாக பிம்ஸ்டெக்கின் உறுப்பினர் நாடான இந்தியாவில் ஏற்பாடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் தங்களின் ஆய்வுகள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைத்தனர். பயங்கரவாதம்; தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம்; போதைப் பொருட்கள் ஆயுதங்கள் மற்றும் ஆள் கடத்தல்; இயற்கை பேரழிவுகள் போன்ற அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்று இணைந்து பணிபுரிய வேண்டும் என்று பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கடல் சார் துறை மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற மரபு சார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளும் ஒன்று இணைந்து பணிபுரிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.