Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு


இங்கிலாந்து பிரதமர் ரைட் ஹானரபிள் திருமதி தெரசா மே பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை இரு பிரதமர்களும் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிதி, வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இங்கிலாந்து பிரதமர் திருமதி தெரசா மே இந்தியாவுக்கு அடுத்த வாரம் மேற்கொள்ள இருக்கும் அரசுமுறைப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறிய பிரதமர் திரு. மோடி, ஐரோப்பாவுக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் இரு தரப்பு அரசுமுறைப் பயணமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

***