பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியை பிரபல இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்துப் பேசியது. இந்தக் குழுவில் ஷியா மதத் தலைவர் மவுலானா கல்பே ஜவ்வாத், சர்வதேச இஸ்லாமிய விவகாரங்கள் அமைப்பின் நிபுணர் கமர் ஆகா, ஷாகித் சித்திக் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
சவுதி அரேபியாவுக்கு அண்மையில் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டதற்காக பிரதமருக்கு இஸ்லாமியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்கள், மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கும், அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கும் இஸ்லாமியர்கள் பாராட்டு தெரிவித்தனர். அப்போது, இஸ்லாமியர்கள் குழுவினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதையும், கல்வி, குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த சிறப்புக் கவனம் செலுத்திவருவதையும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம் போன்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கியுள்ள நலத் திட்டங்களால் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பெருமளவில் பயன் கிடைக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
Met a delegation of eminent Muslims. They shared their joy on the outcomes of my Saudi Arabia visit & on Government's development agenda.
— Narendra Modi (@narendramodi) April 13, 2016
Talked about Govt's efforts to ensure financial inclusion, crop insurance & our focus on girl child education. https://t.co/CIbe4toFNc
— Narendra Modi (@narendramodi) April 13, 2016