Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் இரு நாட்டு பயணம் – அயர்லாந்து மற்றும் அமெரிக்கா செல்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை அதிகாலை இரு நாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். (செப்டம்பர் 23, 2015)

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் செல்லும் பிரதமர் மோடி அங்கு அயர்லாந்து பிரதமர் திரு. என்டா கென்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன் பின் நியூயார்க் நகரத்திற்கு புறப்படும் முன்பு, அயர்லாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாட உள்ளார்.

நியூயார்க் நகரத்திற்கு பிரதமர் நாளை மாலை சென்று அடைவார். (உள்நாட்டு நேரம்)

••••••