பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியும், ஆர்மேனியா பிரதமர் திரு நிக்கோல் பாஷின்யானும், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே இன்று (31.08.2026) சந்தித்துப் பேசினர். இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆர்மேனியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பாஷின்யான் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் திரு பாஷின்யானுக்கும் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆர்மேனியப் பிரதமர் பாஷின்யனின் தேர்தல் வெற்றிக்கும் பதவியேற்புக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்து, சுரங்கம், கல்வி, கலாச்சாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். சமீப காலங்களில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதில் திருப்தி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்பு நட்புறவைக் கொண்ட இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டனர்.
மேற்கு ஆசிய நிலைமை உட்பட, பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர். பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதற்கு, பேச்சுவார்த்தை மூலம் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
ஆர்மேனியா-அசர்பைஜான் அமைதி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதன் தற்போதைய நிலை குறித்து ஆர்மேனிய பிரதமர் பாஷின்யான், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு விளக்கினார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 2304951)
SS/PLM/RJ
PM @narendramodi held a wonderful meeting with PM @NikolPashinyan of Armenia on the sidelines of the SCO Summit in Bishkek. The leaders discussed expanding cooperation in defence, space, IT, education, pharmaceuticals and other areas, along with strengthening trade and investment… pic.twitter.com/tbzfWxQgHb
— PMO India (@PMOIndia) August 31, 2026
A wonderful meeting with Prime Minister of Armenia, Mr. Nikol Pashinyan on the sidelines of the SCO Summit in Bishkek.
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
India-Armenia cooperation is all set to grow in defence, IT, space, education, pharmaceuticals and more.
We are equally certain to deepen trade and… pic.twitter.com/y2W7ToY5GB