Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரம்மபுத்திரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடட் நிறுவனம் திப்ரூகர் அருகே லெபட்கட்டா என்ற இடத்தில் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மெழுகு ஆலை ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பிரம்மபுத்திரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடட் நிறுவனம் திப்ரூகர் அருகே லெபட்கட்டா என்ற இடத்தில் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மெழுகு ஆலை ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


திப்ரூகர் அருகே லெபட்கட்டா என்ற இடத்தில் பிரம்மபுத்திரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடட் நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.02.2016) நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அவர் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மெழுகு உற்பத்தி ஆலையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டுள்ள 2 ஆலைகள் 2 காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார். (அ) இயற்கை கச்சாப் பொருள்களில் இவை ஏற்படுத்தும் மதிப்புக் கூட்டும் நடவடிக்கைக்காக (ஆ) அசாம் இளைஞர்களுக்கு இவை இரண்டும் ஏற்படுத்தித் தரும் வேலை வாய்ப்புக்களுக்காக. இந்த 2 ஆலைகள் அர்ப்பணிக்கப்பட்டதையடுத்து நாடெங்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது, அசாமைப் பொறுத்தவரை பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

திட்டங்களை உரிய காலக்கெடுவில் முடிப்பதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதனால் வேலைவாய்ப்பு ஏற்படுவது உறுதி செய்யப்படும், மேலும் செலவினங்கள் பெருமளவில் கட்டுக்கடங்காமல் போகாமல் தவிர்க்கப்படும் என்றார். இந்தியாவின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க விரைந்த தொழிலியல் மேம்பாடு அவசியமானது என்று பிரதமர் கூறினார். இந்த வகையில் தமது பிரகதி திட்டம் பற்றி குறிப்பி்ட்ட பிரதமர், இத் திட்டம் பல லட்சம் கோடி ரூ. மதிப்பிலான தடைபட்டுப் போயிருந்த திட்டங்களுக்கு உத்வேகம் அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியா அனைத்து விதத்திலும் முன்னேற கிழக்கு இந்தியாவும் முன்னேற்றமடைய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். இந்த வகையில் மத்திய அரசு வடகிழக்கு மண்டலத்தில் அடிப்படை வசதிகளையும் இணைப்புத் திறனையும் மேம்படுத்தி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக பிதரமர் கூறினார்.

மத்திய அரசின் முத்ரா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புக்களை உருவாக்குவதற்கென செயல்படுத்தப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கள் பெரிய நகரங்களில் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மத்திய அரசு ஒத்துழைப்பு அடிப்படையிலான சமஷ்டி கொள்கையின் படி செயல்பட்டு வருகிறது என்றும் மேம்பாட்டை ஏற்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.