Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பை ஏற்படுத்த இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பை (BRICS Agriculture Research Platform – BRICS ARP) உருவாக்க இந்தியா மற்றும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பின்னணி:

ரஷியாவின் உஃபா நகரில் ஜூலை 9, 2015-ல் நடைபெற்ற 7-வது பிரிக்ஸ் மாநாட்டின்போது, பிரிக்ஸ் வேளாண் ஆய்வு மையத்தை உருவாக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். இது ஒட்டுமொத்த உலகுக்கும் பரிசாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு மூலம், நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை இந்த மையம் ஊக்குவிக்கும்.

பிரிக்ஸ் நாடுகளில் சிறிய அளவில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொழில்நுட்பங்கள் உள்பட வேளாண் ஆய்வுக் கொள்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, வேளாண் ஆய்வு அமைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கோவா-வில் அக்டோபர் 16, 2016-ல் நடைபெற்ற 8-வது பிரிக்ஸ் மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பிரிக்ஸ் வேளாண் ஆய்வு அமைப்பு (BRICS-ARP), அறிவியல் ரீதியான வேளாண் அடிப்படையிலான நீடித்த வளர்ச்சிக்கான இயற்கையான சர்வதேச அடித்தளமாக இருக்கும். இதன்மூலம், உலக அளவிலான பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் சமத்துவமின்மை, குறிப்பாக விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் இடையேயான வருமானத்தில் சமத்துவமின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும். மேலும், வேளாண் வர்த்தகம், உயிரி-பாதுகாப்பு மற்றும் வானிலையைத் தாங்கும் வேளாண்மை ஆகியவற்றை வலுப்படுத்தும்.

******