Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே ஆய்வு செய்தார் பிரதமர். ரூ 500 கோடி மதிப்புள்ள நிவாரணத்திற்கு உடனடியாக அறிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான் வழியே இன்று ஆய்வு செய்தார். வெள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ 500 கோடி மதிப்புள்ள நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். அங்கு நிலைமையை அவர் நேரில் கண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் இழப்பீட்டு நடவடிக்கைகள் குறித்து பீகார் முதல் அமைச்சர் திரு. நிதிஷ் குமார், துணை முதல் அமைச்சர் திரு. சுசில் மோடி ஆகியோருடன் விவாதித்து விரிவாக அறிந்து கொண்டார். மாநிலத்திற்கு இயன்ற வரையிலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் அறிவித்தார். அங்கு நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ 500 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதாகவும் அறிவித்தார்.

மத்திய அரசின் குழுவினர் விரைவில் மாநிலத்திற்கு வருகை புரிந்து அங்கு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையாளர்களை உடனடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து விவசாயிகளின் பயிர் சேதம் குறித்த இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் படியும் பிரதமர் உத்தரவிட்டார்.

தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிட உத்தரவிட்டார். இதே போல் மாநிலத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்ட இடங்களில் உடனடியாக மின் இணைப்பை சரிசெய்யவும் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ 50000மும் வழங்க உத்தரவிட்டார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் நேபாள பிரதமர் திரு. ஷேர் பகதூர் தியூபாவும் இணைந்து சப்தகோசி மேல் அணை திட்டம் மற்றும் சன்கோசி நீர்த்தேக்க அணை மற்றும் நீர் திருப்பிவிடும் திட்டத்திற்கான திட்ட முன்வடிவுகளை விரிவாக பெறுவது என ஒப்புக் கொண்டார்கள். தண்ணீர் தேங்கும் இடங்களிலும் வெள்ளக்கட்டுப்பாடு குறித்தும் கூடுதல் ஒருங்கிணைப்பிற்கு இருவரும் ஏற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் இப்பகுதி முழுவதிலும் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு பெரிதும் ஊக்கமாக அமையும்.

****