பி.எம்.இந்தியா
இங்கு கூடியிருக்கும் எனது அமைச்சரவை சகாக்கள்டாக்டர் மகேஷ் சர்மா, திரு. கிரண் ரிஜிஜு, சர்வதேச பவுத்த ஃபவுண்டேஷன் தலைமைச் செயலர் டாக்டர் தம்மப்ரியா, நாடு முழுவதுமிருந்து வந்திருக்கும் புனிதப் பயணிகளே, சகோதர, சகோதரிகளே!
ஒரு மந்திரத்தை ஆயிரக்கணக்கானோர் கூடி உச்சாடனம் செய்தால் பெரும் சக்தி ஏற்படும் என்பது ஒரு நம்பிக்கை. அதே சக்தியை நாம் இன்று உணர முடிகிறது. நமது கண் திறந்தால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியும். ஆனால், அதே சமயம் ஒவ்வொரு கணமும் நமது மனங்களில் புத்தர் பிரானின் பெயர் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
பகவான் புத்தர் மீதான நமது பக்தி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.
மந்திரத்தால் மக்கள் கட்டுண்டு கிடப்பதைப் போல் புத்தராலும் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்தப் புனிதமான புத்த பூர்ணிமா தினத்தன்று மதிப்புக்கு உரிய மதத் தலைவர்களின் நல்லாசியைப் பெறுவதற்காக உங்கள் முன் நிற்கும் இந்த அரிய வாய்ப்பைப் பெற்றதற்காக நான்தான் மிகவும் கொடுத்து வைத்தவன்.
இது எனது இரண்டாவது வருகை என்று திரு மகேஷ் சர்மாவும், திரு. கிரண் ரிஜிஜுவும் இப்போது கூறினார்கள். கடந்த ஆண்டு கூட இதைப் போன்றதொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இலங்கை மக்களுடனும் அரசினருடனும், உலகம் முழுதுமிருந்து வந்திருந்த பவுத்தத் துறவியருடனும் புத்த பூர்ணிமா கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றேன்.
நாம் அனைவரும் பல்வேறு பொறுப்புகள், பணிகளில் இருக்கிறோம். இத்தனைக்கும் இடையில் பகவான் புத்தரின் பெயரை உச்சாடனம் செய்வதன் மூலம் இரட்சிக்கப் பெறலாம். ஆனால், இங்கே கூடியிருக்கும் பவுத்த துறவியர் (பிக்குகள்) புத்தர் பிரான் போதித்த அன்பு, நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளை பரப்புவதற்காகத் தங்களது வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் புத்தர் காட்டிய வழியில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதும் புத்தர் பிரானின் கருத்துகளைப் பரப்பி வரும் உன்னதமான ஆத்மாக்களைத் தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
நாடு முழுவதுமிருந்து வந்துள்ள அனைத்து மக்களையும் நான் மனமார வரவேற்கிறேன். இந்தப் பணியில் முனைப்புக் காட்டி, ஈடுபடும் அனைத்து தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலப் பணிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, சாரநாத்தில் உள்ள திபெத் உயராய்வு மத்திய நிறுவனம், பைகசாக் கவுரவம் பெறும் அகில இந்திய பிக்ஷுக் சிங் சங்கம் ஆகியவற்றுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
உலகின் இந்தப் பகுதி, அதாவது நம் இந்தியாவில் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் கூறுகள் அபரிதமிதமாக இருக்கின்றன. இதுபோல் வேறு எங்கேயும் காண முடியாது.
கவுதம புத்தரின் பிறப்பு, கல்வி, துறவுநிலை ஏற்றது ஆகியவை குறித்து பல நூற்றாண்டுகளாக ஏராளமாகக் கூறியாகிவிட்டது. நல்ல காலமாக அவற்றில் ஒரு சில பகுதிகள் பல்வேறு இடையூறுகளுக்கும் இடையில் நமது இளைய தலைமுறையினருக்காக மீதி இருக்கின்றன.
நமது மண்ணிலிருந்து உதித்த அனைத்துக் கோட்பாடுகளின் மையக் கருத்தாக இருப்பது மனிதகுல நலனே என்ற நிலை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். புதிய சிந்தனைகள் உருவாகும் இந்த யுகத்தில் மற்றவர்களின் உரிமைகள், உணர்வுகளில் யாருமே தலையிடவில்லை என்ற நிலை குறித்தும் பெருமை அடைவோம். மற்றவர்களின் கோட்பாடுகள், மதங்களுக்கு எதிராக பாரபட்சம் கட்டுவதில்லை.
இந்தியாவில் தோன்றிய அனைத்துக் கோட்பாடுகளும் ஒட்டுமொத்த மனித குல நலன்களுக்காகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்தும் நாம் பெருமைப்படலாம். நம்மைப் பின்பற்றுவோர் மட்டுமே நலன்கள் பெறுவர் என்று ஒரு போதும் நாம் கூறியதுமில்லை, கூறப் போவதும் இல்லை. புத்தர் பிரானின் சிந்தனைகள் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இன்றைக்கு ஆசியாவின் பல நாடுகளின் தேசியப் பண்புநலனாகவே வகுக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
இதுதான் நமது மண்ணின் சிறப்பு. எனவே, இதரநாடுகளின்ஆதாரவளங்கள்மீதுஆதிக்கம்செலுத்தஇந்தியாஆர்வம்காட்டியதேயில்லை, என்பதற்கு நமது பாரம்பரியமே சாட்சியாகும் என்று நம் நாடும் ஒவ்வொரு இந்தியனும் பெருமிதத்துடன் கூறிக் கொள்ளலாம். இந்தியா ஒருபோதும் பிற நாடுகளின் மீது படையெடுத்ததேயில்லை. நம் நாடு இதே வழியில்தான் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்தக் கோட்பாடு கடந்த ஆயிரம் ஆண்டுகளாகவே உள்ளது.
நண்பர்களே,
சித்தார்த்தனாக இருந்தவர் கவுதம புத்தராக மாறிய பயணம் மகாநிர்வாணத்தை அடைந்த கதை மட்டுமன்று. ஒருவர் தனது அறிவாற்றல், செல்வம் ஆகியவற்றின் மூலம் பிறரது வலியையும் துன்பத்தையும் நீக்க முயல்வதுதான் சித்தார்த்தன் புத்தராக மாறும் பயணம் என்ற உண்மையை உணர்த்தும் கதையும் ஆகும். அத்தகைய நபரால் ஞானத்தை அடையும் பாதையில் பயணம் செல்ல முடியும்.
புத்த பூர்ணிமா கொண்டாடுவது இரக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளும் தருணமாகும். புத்தரின் கோட்பாடுகளைப் பயங்கரவாதம், இனவெறி, பிரிவினைவாதம் ஆகிய கருமேகங்கள் சூழ்ந்துள்ள நேரத்தில் இரக்கம், சகோதரத்துவம் ஆகிய மிகவும் பொருத்தமானவையாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் அமைந்துவிடுகின்றன.
வாழ்க்கை என்பது அழிவு, வன்முறை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றுடன் மோதிப் போரிட்டு வெல்வதல்ல. வெறுப்புணர்வு, வன்முறை, அநீதி ஆகியவற்றை நட்பு, அன்பு ஆகியவை முலம் ஜெயிப்பதுதான் வாழ்க்கையாகும்.
கோபமுள்ள மனத்தை புத்தரின் தியான முறையின் மூலம் வென்றவர்கள் இறவா நிலையை எய்துகிறார்கள். உண்மையும் இரக்கமும் இணைந்த நிலைதான் நமக்குள்ளே இருக்கும் புத்தரை பிரகாசிக்கச் செய்யும்.
புத்தர் என்றால் வன்முறை மிகுந்த மனத்தை தூய்மையான அமைதியான மனமாக மாற்றுவது என்று பொருள். இந்தியாவும் பவுத்தமும் மனிதர்களுக்கு இடையில் சாதி, சமயம், இனம், மொழி அடிப்படையில் வேறுபாடு என்ற கோட்பாட்டை அளித்ததே இல்லை.
மக்கள் எந்த மொழி, இனம், சாதி, மதம் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது தனித்தன்மை போற்றி மதிக்கப்படும். உதாரணத்திற்கு, யூதர்களும், பார்சிகளும் நம்மோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரண்டறக் கலந்து, நம் சமூகத்தின் அங்கமாகிவிட்டனர். அவர்களுடன் வேறுபாடு காட்டுவதில்லை. நம் வாழ்வில் சமத்துவம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதே புத்தரது வாழ்க்கையைவாழ்வதாகும். அதே நல்லிணக்கம், சமத்துவத்தின் அடிப்படையில்தான் புத்தர் பிரான் உலகின் “மகாபுருஷர்” என்று மிகவும் போற்றப்படுகிறார். பகவான் புத்தர் காட்டிய பாதையில் அவரது கோட்பாடுகளைப் பின்பற்றி பாபாசாகேப் அம்பேத்கரும் பயணம் செய்தார்.
இந்தியா தனது பல்வேறு முன்னேற்றங்களுடன் புத்தரின் மண்ணாக இன்று அறியப்படுகிறது. அத்துடன் உலகில் இந்தியாவின் சிறப்பும் மேன்மை அடைகிறது.
“புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்பது நமது புனித மண்ணிலிருந்து உலகுக்கே மானுடம் சார்ந்து போதிக்கும் மக்களின் மந்திரமாகிவிட்டது.
எனவே, “மற்றவர்களை மாற்றுவதற்கு முன்பு நீங்களே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் புத்தர் ஆவீர்கள். பிறர் மீது குற்றம் சுட்டிக் காட்டுவதற்கு முன் உங்களையே வெல்லுங்கள். அப்போது நீங்கள் புத்தர் ஆவீர்கள்” என்பதே புத்த பூர்ணிமா கொண்டாடும் இத்தருணத்திற்கான செய்தியாகும்.
“அபோ தீப, ஆப் பவ” (‘Apo deepahAapbhava’) என்ற வாசகம் உண்டு. “உங்களுக்குள்ளேயே ஒளியைத் தேடினால், நீங்கள் புத்தராவீர்கள்” என்பது அதன் பொருளாகும்.
கவுதம புத்தர் இரக்கம், அமைதி ஆகிய கோட்பாட்டைப் பரப்பி, எப்போதும் உத்வேகம் அளிப்பவராகவும் இருக்கிறார். இன்றைய ஜனநாயக உலகுக்கு சமத்துவம், நீதி, விடுதலை, மனித உரிமைகள் முக்கிய விழுமியங்களாக இருக்கின்றன. ஆனால், இத்தகைய கோட்பாடுகள் குறித்து தெளிவான செய்தியை 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதம புத்தர் அளித்துவிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு தனிச் சிந்தனை அல்ல. மாறாக, உலகளாவிய நோக்கத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறது.
பகவான் புத்தரின் தத்துவத்தைப் பொறுத்தவரையில், சமத்துவம் என்றால் ஒவ்வொரு மனிதனும் உலகில் கவுரமாக வாழ்வதாகும். ஒவ்வொருவரும் பாரபட்சமின்றி வளங்களைப் பெறவும், உரிமைகளை அடையவும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சம்மான வாய்ப்பு பெற வேண்டும்.
நண்பர்களே,
ஒவ்வொரு நாட்டிலும் பயங்கரவாதம், இனவாதம் மற்றும் அது போன்ற சமத்துவமற்ற நிலைகளை மனிதர்களைத் தவிர வேறு யாரும் உருவாக்கவில்லை. இத்தகைய சமத்துவமற்ற தன்மைகளே அநீதி, சுரண்டல், அட்டூழியம், வன்முறை, சமூகப் பகைமை ஆகிவற்றுக்கு மூல காரணங்களாகும். அதற்கு மாறாக, நீதி, சுதந்திரம், மனித உரிமைகள் ஆகிய கோட்பாடுகள் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் உருவாயின. சமத்துவமே இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையாகும் என்பது இதன் பொருளாகும்.
சமத்துவம் என்ற உணர்வு நம் சமூகத்தை வலுப்படுத்துமானால், சமூகநீதி, சுதந்திரம், விடுதலை, மனித உரிமைகள், சமூக மாற்றம், தனிநபர் உரிமைகள், அமைதி, நல்லிணக்கம், வளம் ஆகியவற்றுக்கான பாதை திறந்துவிடும். அதையடுத்து நாம் வேகமாக முன்னேறுவோம்.
புத்தர் பிரான் தனது போதனைகளில் “அஷ்டாங்கம்” (‘Ashtang’) என்ற நிலை குறித்து விவரித்துள்ளார். “அஷ்டாங்கம்” என்ற அந்தப் பாதையைப் புரிந்துகொள்ளாமல் புத்தரின் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. புத்தர் பிரானின் எட்டுவகை பாதையில் நேரிய பார்வை, நேரிய சிந்தனை, நேரிய பேச்சு, நேரிய நடத்தை, நேரிய வாழ்க்கை, நேரிய மனசாட்சி, நேரிய ஆலோசனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நாம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, புத்தர் பிரானின் பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம் தீர்ப்பது சாத்தியமானதே. உலகத்தைக் காப்பதற்கு புத்தர் நமக்களித்த அன்பு, இரக்கம் ஆகிய செய்திகளைப் பின்பற்றுவதே இன்றியமையாதவை ஆகும். இந்தப் பாதையில் சென்றால்தான் ஒருவர் வலிமையைப் பெற இயலும் என்று பகவான் புத்தரே கூறியுள்ளார்.
நண்பர்களே,
பகுத்தறிவின் அவசியத்தை உணர்ந்த தத்துவ ஞானிகளில் புத்த பிரானும் ஒருவராவார். அவரது கொள்கையின் நியாயங்களை ஆத்ம பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளைக்கூட, அகங்காரமின்றி சிந்தித்து முடிவெடுக்குமாறு புத்தபிரான், தமது ஆதரவாளர்களை அடிக்கடி கேட்டுக்கொள்வது வழக்கம். புத்தபிரானின் கொள்கைகளுக்கு ஒரு வடிவம் கொடுப்பதற்காக, இரண்டாம் நூற்றாண்டில், உதய் மன்னருக்கு நாகார்ஜுனா வழங்கிய ஆலோசனைகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளன.
பார்வையற்றோர், நோயாளிகள், வாய்ப்பு மறுக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளிடம் பொறுமையை கடைபிடித்து, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். நோயாளிகள்மீது கவனம் செலுத்துவதுடன், துயரத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான விதை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும்.
ஒட்டு மொத்த உலகிற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வியே புத்தபிரானின் உலகளாவிய தொலைநோக்காக இருந்தது. ஒருவர் துயரத்தில் இருக்கும்போது, அவரை கவலைத் தோய்ந்த முகத்துடன் பார்ப்பதைவிட, அந்த நபர் பாதிப்புக்கள் மற்றும் துயரங்களிலிருந்து மீண்டு வருவதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவது வழக்கம்.
புத்தபிரானின் கொள்கைகளை பின்பற்றி, அவர் காட்டிய பொறுமை மற்றும் சேவை உணர்வின் அடிப்படையிலேயே நமது அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் துயரங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம்.
ஏழை மக்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில், ஜன்தன் திட்டத்தின்கீழ், ஒரு நாளைக்கு 90 காசுகள் மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு ரூபாய் பிரிமியம் செலுத்தி, 31 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு சுமார் 19 கோடி காப்பீடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், 3 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. 3 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்திரதனுஷ் இயக்கத்தின்கீழ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வங்கி உத்தரவாதம் ஏதுமின்றி, முத்ரா திட்டத்தின்கீழ், 12 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு. ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்வரை மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
நண்பர்களே,
உள்ளார்ந்த மற்றும் ஒற்றுமை எண்ணங்கள்தான் புத்தரிடம் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தின. அவர் ஒரு மன்னனின் மகன் ஆவார். அவரது வாழ்க்கையில் எல்லா சொகுசு வசதிகளும் கிடைத்தன; ஆனாலும், துயரம் மற்றும் வேதனையில் இருக்கும் ஒருவரை காணும்போதெல்லாம், அவர்களிலிருந்து தாம் வேறுபட்டவர் அல்ல என்பதையும், அவர்களைப் போன்றவர்தான் தாமும் என்று கருதினார்.
இந்த உண்மைதான், அவருக்கு, ஞானம், பகுத்தறிவு, அறிவுத் திறன், நீதிநெறி மற்றும் கவர்ச்சி தொடர்பான தொலைநோக்கு சிந்தனையை ஏற்படுத்தி, அவருக்குள் ஒரு சக்தியை உருவாக்கியது.
அந்த உணர்வுகளை இன்று நாம் ஏற்றுக் கொண்டால், நாம் உண்மையான மனிதநேயம் மிக்கவராக திகழமுடியும். மனிதகுலத்தின் நன்மைக்காகவும், 21ம் நூற்றாண்டை உலகின் மிக முக்கியமான நூற்றாண்டாக மாற்றவும், இவற்றை பின்பற்றவேண்டும்.
சகோதர, சகோதரிகளே,
நீண்டகால அடிமைப்படுத்தலுக்கு பிறகும், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க, முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்றை பாதுகாக்க முடியாத எந்தவொரு நாடும், அதன் எதிர்காலச் சந்ததியினருக்காக பாரம்பரிய கம்பீரத்தை விட்டுச்செல்லமுடியாது. இதைக் கருத்தில் கொண்டு, நமது அரசாங்கம் கலாச்சார பாரம்பரியத்தையும், புத்தபிரானின் நினைவுசார்ந்த அம்சங்களையும், பேணி பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள 18 மாநிலங்களில் புத்தபிரானுடன் தொடர்புடைய யாத்திரை தலங்கள் உள்ளன. அவற்றில் பல இடங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தவை என்பதுடன், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த இடங்களில் மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை உலகத் தரத்தில் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனைக் கருத்தில் கொண்டே, சுதேச தர்ஷன் திட்டத்தின்கீழ், புத்தமத சுற்றுலாத் தொகுப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புத்தமத சுற்றுலாத் தொகுப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.360 கோடியை ஒப்பளிப்பு செய்துள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள புத்தமத சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தவிர, கயா-வாரணாசி-குஷி நகர் வழித்தடத்தில் உள்ள சாலை நெடுகிலும், தேவையான வசதிகளை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுலாத்துறை சார்பில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச புத்தமத மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், இதில் பங்கேற்கவுள்ளனர். நமது கலாச்சார பாரம்பரியத்தை அதிக அளவிலான மக்களுக்கு தெரியப்படுத்தி, அதன் மூலம் பிற நாடுகளை சேர்ந்த மக்களும், புத்தமத தலங்களை பார்வையிட வருவதுடன், அது பற்றிய அறிவையும் அவர்களிடம் ஏற்படுத்துவதே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நோக்கமாகும். அத்துடன், அண்டை நாடுகளில் உள்ள புத்தமதம் சார்ந்த பாரம்பரியச் சின்னங்களை பாதுகாக்கவும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. மியான்மரில் உள்ள பாகன் மற்றும் ஆனந்தா கோவில்களை புனரமைத்து, அவற்றை ரசாயன முறையில், பாதுகாக்கும் பணியையும், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுத்தின்போது, இந்த கோவில் சிதிலமடைந்தது.
ஆப்கானிஸ்தானின் பாமியான், கம்போடியாவின் அங்கோர்வாட் மற்றும் தா ப்ரோம், லாவோஸில் உள்ள வாட் போவ் மற்றும் வியட்நாமின் மை சன் கோவில்களை பராமரிக்கும் பணியையும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டுள்ளது. மங்கோலியாவில் உள்ள காந்தன் மடாலய பராமரிப்பு மற்றும் அங்குள்ள கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியிலும் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.
இன்று (30.04.2018) இந்த மேடையிலிருந்து, சில மத்திய அமைச்சகங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். புத்தரின் போதனைகள் அடங்கிய தொகுப்பான “ த்ரிப்பிதாகா”வை பாதுகாத்து, அனைத்து மொழி பெயர்ப்புகளையும் ஒருங்கிணைப்பது எப்படி? பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் புத்தமத தத்துவங்களை ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவருவது எப்படி? புத்தரின் போதனைகளை எளிமையாக வார்த்தைகளில் விளக்கக்கூடிய புதிய இணையதளத்தை உருவாக்க முடியுமா? என வினவுகிறேன். இந்தத் திட்டத்திற்கான முன் முயற்சிகளுக்கு தலைமையேற்று, பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி முடிக்குமாறு அமைச்சர் திரு மகேஷ் ஷர்மாவை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே,
2500 ஆண்டுகளுக்கு பிறகும், புத்தரின் போதனைகள் இன்றும் நம்முடன் இருப்பது, நம் அனைவருக்கும் கிடைத்த கவுரவமாகும். இது நமக்கு கவுரவம் என்று நான் ஏன் கூறுகிறேன் என்பதற்கான காரணங்களை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நமது முன்னோர்கள் இவற்றை பாதுகாப்பதில், முக்கிய பங்கு வகித்தனர். நமக்கு முந்தைய தலைமுறையினரின் பங்களிப்பு காரணமாகவே, புத்த பூர்ணிமாவையொட்டி, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய நம்மால் முடிகிறது. நமது வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்வதற்காக, 2500 ஆண்டுகளாக இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க நமது முன்னோர்கள் அயராது பாடுபட்டுள்ளனர். உங்களது தீவிர பங்களிப்பு மற்றும் முடிவுகளுக்காக வருங்கால மனிதகுலம் காத்திருக்கிறது.
நம் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள 2022ம் ஆண்டுவாக்கில், நீங்கள் அனைவரும் குறைந்தது ஐந்து அல்லது பத்து முடிவுகளை மேற்கொள்வது பற்றி, சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கவுதம புத்தரின் போதனைகளை பரப்புவது அல்லது நமது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்ற முடிவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எனினும், இங்கு குழுமியுள்ள ஒவ்வொரு தனிநபர், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேறக்கூடிய சில முடிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது முயற்சிகள் புதிய இந்தியாவை படைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். சவால்கள் பற்றி நாம் அறிவோம். புத்தபிரானின் ஆசிர்வாதங்கள் நமக்கு உண்டு. எனவே, நமது முடிவுகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என நம்புகிறேன்.
புனித நாளான புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இன்றைய வேளையில், புத்தபிரானின் காலடியில் அமர்ந்து, அவரது ஆசிகளை பெறுவதோடு, உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனவே, நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது புத்த பூர்ணிமா வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மிகுந்த நன்றி
समय की मांग है कि संकट से अगर विश्व को बचाने के लिए, बुद्ध का करुणा प्रेम का संदेश काम आता है तो बुद्ध को मानने वाली सभी शक्तियां सक्रिय होनी चाहिए।
— PMO India (@PMOIndia) April 30, 2018
भगवान बुद्ध ने भी कहा था कि इस रास्ते पर संगठित होकर चलने से ही सामर्थ्य प्राप्त होगा: PM
भगवान बुद्ध कहते थे कि किसी के दुख को देखकर दुखी होने से ज्यादा बेहतर है कि उस व्यक्ति को उसके दुख को दूर करने के लिए तैयार करो, उसे सशक्त करो।
— PMO India (@PMOIndia) April 30, 2018
मुझे प्रसन्नता हैं की हमारी सरकार करुणा और सेवाभाव के उसी रास्ते पर चल रही हैं जिस रास्ते को भगवान बुद्ध ने हमें दिखाया था: PM
गुलामी के कालखंड के बाद अनेक वजहों से हमारे यहां अपनी सांस्कृतिक विरासत को सहेजने का कार्य उस तरीके से नहीं हुआ, जैसे होना चाहिए था।
— PMO India (@PMOIndia) April 30, 2018
इसे ध्यान में रखते हुए हमारी सरकार अपनी सांस्कृतिक धरोहर और भगवान बुद्ध से जुड़ी स्मृतियों की रक्षा के लिए एक बृहद विजन पर भी काम कर रही है: PM
Buddhist Circuit के लिए सरकार 360 करोड़ रुपए से ज्यादा स्वीकृत कर चुकी है। इससे उत्तर प्रदेश, बिहार, मध्य प्रदेश, आंध्र प्रदेश और गुजरात में बौद्ध स्थलों का और विकास किया जा रहा है: PM
— PMO India (@PMOIndia) April 30, 2018
ये हम सभी का सौभाग्य है कि 2500 वर्ष बाद भी भगवान बुद्ध की शिक्षाएं हमारे बीच हैं। निश्चित तौर पर हमारे पहले जो लोग थे, इसमें उनकी बड़ी भूमिका रही है। ये हमसे पहले वाली पीढ़ियों का योगदान था,कि आज हम बुद्ध पूर्णिमा पर इस तरह के कार्यक्रम कर पा रहे हैं: PM
— PMO India (@PMOIndia) April 30, 2018
अब आने वाला मानव इतिहास आपकी सक्रिय भूमिका का इंतजार कर रहा है । मैं चाहता हूं कि आज जब आप यहां से जाएं, तो मन में इस विचार के साथ जाएं कि 2022 में, जब हमारा देश स्वतंत्रता के 75 वर्ष का पर्व मना रहा होगा, तब तक ऐसे कौन से
— PMO India (@PMOIndia) April 30, 2018
5 या 10 संकल्प होंगे, जिन्हें आप पूरा करना चाहेंगे: PM